Published : 14 Jan 2017 02:53 PM
Last Updated : 14 Jan 2017 02:53 PM
நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி யால் மறந்துபோன பல விஷயங் களில் முக்கிய இடம் வகிப்பவை வாழ்த்து அட்டைகள். அன்பு, நேசத்துடன், நட்பையும், உறவை யும் வளர்த்த வாழ்த்து அட்டைகளை எதிர்நோக்கிக் காத்திருந்த காலம் மலையேறிவிட்டது.
பண்டிகைகளின்போது வாழ்த்து சொல்லும் மரபு பண்டைய காலத் தில் இருந்தே கடைபிடிக்கப் பட்டுள்ளது. எகிப்தில் புத்தாண் டுக் கொண்டாட்டங்களின்போது வாசனைத் திரவியங்களை அன் பளிப்பாகக் கொடுத்துள்ளனர்.
ரோம் நாட்டில் ஆலிவ் இலைகளின் மீது தங்க முலாம் பூசிக் கொடுத்து, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண் டனர். அச்சு இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு, வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு, அதை விற்பனை செய்யும் வழக்கம் தோன் றியது. 1850-களில் நவீன வாழ்த்து அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு வர்த்தக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகைகளின்போது வாழ்த்து அட்டைகளை அனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. 1970 முதல் 2000-ம் ஆண்டு வரையிலான காலத்தை வாழ்த்து அட்டைகளின் பொற்காலம் என்றே கூறலாம்.
பண்டிகைகளின் தொடக்கத் தில் நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வரும் வாழ்த்து அட்டை களுக்காக காத்திருந்த காலம் அது. அஞ்சல் நிலையங்களில் வாழ்த்து அட்டைகளைப் பெறுவதற் கென்றே தனி பெட்டிகள் வைக்கப் பட்டிருக்கும்.
இதுகுறித்து தேசிய விருது பெற்ற அஞ்சல் துறை முன்னாள் அதிகாரி நா.ஹரிஹரன் கூறிய தாவது: அஞ்சல் நிலையங்களில் மலைபோல குவியும் வாழ்த்து அட்டைகளைப் பிரித்து, அனுப்பும் பணியில் இரவு பகலாகப் பணியாற்றிய காலம் உண்டு. 1970-ல் 6.74 லட்சம், 1980-ல் 7.76 லட்சம், 1990-ல் 10.24 லட்சம் வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளனன.
ஆனால், அதற்குப் பின் இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 2010-ல் 1.50 லட்சம் வாழ்த்து அட்டைகளே அனுப்பப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகள் இந்த எண்ணிக் கையும் வெகுவாகக் குறைந்து விட்டது. அன்பு, நட்பைப் பரி மாறிக்கொள்ளவும், கசப்புகளை மறந்து, உறவைத் தொடரவும் உதவிய வாழ்த்து அட்டைகள் வலம் வந்த காலம் மறக்க முடியாத தாகிவிட்டது என்றார்.
கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள வாழ்த்து, திருமண அட்டைகள் கடையில் பணியாற்றும் பாலுசாமி(40) கூறும்போது, “கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்த்து அட்டைகளை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகி றேன்.
அப்போது 50 பைசா முதல் ரூ.200 வரையிலான விலைகளில், பல்வேறு அளவுகள், டிசைன்களில் வாழ்த்து அட்டைகள் விற்பனை யாகும். ஆனால், அதில் 10 சதவீதம் கூட தற்போது விற்பனையாவ தில்லை” என்றார்.
வாழ்த்து அட்டைகளை அனுப்பு வது வெகுவாகக் குறைந்துவிட் டாலும், வாழ்த்துகளை அனுப்பு வது குறையவில்லை. குறுந்தக வல்களாக செல்போனில் வாழ்த்து கள் அனுப்பப்பட்டன. தற்போது, ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்றவற்றில் வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
நவீன தொழில்நுட்பத்தின் உதவி யுடன் பல டிசைன்களில் வாழ்த் துகள் உருவாக்கப்பட்டு, கம்ப்யூட் டர்கள் மற்றும் செல்போன்கள் மூலம் எண்ணற்ற நண்பர்கள், உறவினர்களுக்கு ஒரே நேரத்தில், நொடிப்பொழுதில் வாழ்த்துகள் அனுப்பப்படுகின்றன.
என்னதான் நவீன வடிவங்களில் வாழ்த்துகளை அனுப்பினாலும், வாழ்த்து அட்டைகளை வாங்கி, அதில் கைப்பட எழுதி, உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி நட்பையும், அன்பையும் பரிமாறிக்கொண்ட உணர்வை எதுவும் தராது. எல்லாமே அவசரமான தற்போதைய சூழலில், வாழ்த்துகளை அனுப்புவதும் வெறும் சம்பிரதாயமாகி விட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT