Published : 29 Jul 2016 10:28 AM
Last Updated : 29 Jul 2016 10:28 AM
மாசடைந்த நீர்நிலைகளில் இருந்து திடக்கழிவை அகற்ற, உதகை அரசுப் பள்ளி மாணவர் சூரிய ஒளியில் இயங்கும் தானியங்கிக் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.அருண். பிளஸ் 1 படிக்கிறார். இவர், நீர்நிலைகளில் உள்ள திடக் கழிவை அகற்ற சூரிய ஒளியில் இயங்கும் கருவியை, அறிவியல் ஆசிரியர் எல்.சுந்தரத்தின் உதவியு டன் கண்டுபிடித்துள்ளார். உதகை யில் நடந்த புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான போட்டி யில் தனது படைப்பை காட்சிப் படுத்தினார்.
தனது கருவிக்கு ‘தானியங்கி நீர்நிலை சுத்தப்படுத்தி’ என பெயரிட் டுள்ள எம்.அருண் இதுபற்றி கூறியதாவது:
இன்றைய காலகட் டத்தில் தமிழ கத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் அழிந்துவிட்டன. இருக்கும் சொற்ப நீர்நிலைகளும் மாசடைந்துள்ளன. குளங்களை நாம் குப்பை கொட்டும் தளங்களாக மாற்றிவிட்டோம்.
இந்நிலையில், மாசடைந்த நமது நீர்நிலைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று எண்ணும்போது, தானியங்கி நீர்நிலை சுத்தப் படுத்தியை உருவாக்கும் எண் ணம் வந்தது. நீர்நிலைகளை சுத்தப்படுத்த மனித ஆற்றல் அதிகமாக தேவைப்படுவதாலும், மாசுகளால் ஆட்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும், ரோபோ அமைக்க முடிவு செய்தேன்.
சூரிய ஒளியில் இயங்கும் வகை யில் அமைக்கப்பட்டுள்ளதால், மின்சாரம் தேவையில்லை. கன் வேயர் பெல்ட்டில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகள் தண்ணீரில் மூழ்கி, கழிவை அகற்றி, அதைத் தனியாக தொட்டியில் சேக ரிக்கிறது. இந்தத் தொட்டியில் உள்ள கழிவை எளிதில் அப்புறப் படுத்திவிடலாம் என்றார்.
ரூ.20 ஆயிரம் செலவில்..
ஆசிரியர் எல்.சுந்தரம் கூறிய தாவது: பாரம்பரிய நீர் மேலாண் மையை புறக்கணித்துவிட்டதால், நீர்நிலைகள் மாசடைந்து, அவற்றை நாம் இழந்து நிற்கி றோம். இந்த கருவி ரிமோட் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. இதனால் கருவியை நீர்நிலையில் அமைத்துவிட்டு, கரையிலிருந்து ரேடியோ அலைவரி சையில் இயங்கும் ரிமோட் மூலம் இயக்கலாம். இதன் மாதிரி கருவி உருவாக்க ரூ.20 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது.
அரசு அங்கீகாரம்
இந்த கருவி புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான போட்டியில் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் தேர்வானால் மாநில போட்டிக்கு தகுதி பெறும். இதை அரசு அங்கீகரித்தால் மக்களுக்கு உதவி யாக இருக்கும் என்றார்.
இந்த கருவியை உருவாக்கிய மாணவர் அருணின் தந்தை மணி, ஹோட்டலில் பணிபுரிபவர். சகோதரர் கோகுல் கடந்த ஆண்டு நடந்த புத்தாக்க அறிவி யல் ஆய்வு விருதுக்கான போட்டியில் பங்கேற்று, அதிவே கமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் கருவியை உரு வாக்கி, மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றார். ஆனால், போதிய அங்கீகாரம் இல்லாததால், அவர் தனது முயற்சியை கைவிட்டார்.
மாணவர் அருணின் கண்டு பிடிப்பு மிகவும் அவசியமானதால் அரசு அங்கீகரித்து, தொழில் முறையில் கருவியை உருவாக்க ஊக்கமளிக்க வேண்டும் என அவரது தந்தை மணி விருப்பம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT