Published : 28 Jun 2017 02:31 PM
Last Updated : 28 Jun 2017 02:31 PM
தமிழக அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் சம்பந்தி செல்லபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2011 மே மாதத்தில் இருந்து 5 ஆண்டுகள் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்தவர் கே.செல்லபாண்டியன். இவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சம்பந்தி ஆவார்.
இவர் அரசு சார்பில் வழக்குகளில் ஆஜரானதற்காக தர வேண்டிய கட்டண பாக்கியை வழங்க அரசு துறை சார்ந்த 156 பிரிவுகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாண குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு கட்டண பாக்கியை வழங்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT