Published : 25 Mar 2017 09:54 AM
Last Updated : 25 Mar 2017 09:54 AM
அங்கீகாரம் இல்லாமல் வீட்டு மனைகளாக மாற்றப்பட்ட விளை நிலங்களை நீதிமன்றம் மற்றும் துறைரீதியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறி பத்திரப்பதிவு செய்த விவரங்களை உடனே அனுப்புமாறு பத்திரப்பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அங்கீகாரம் இல் லாமல் வீட்டுமனைகளாக மாற்றப் பட்ட விளைநிலங்களை பதிவு செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையால் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் முதல் பத்திரப்பதிவு ஏதும் இல்லாத நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் முடங்கியுள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நீதிமன்றத்தை அணுகினர். அப் போது, இவ்விஷயத்தில் நிலங் களை வகைப்படுத்துவதில் அரசின் கொள்கை முடிவை நீதிமன்றத் தி்ல் தெரிவிக்கும்படி உத்தரவிடப் பட்டது.
பலமுறை முறையிட்டும் பத்தி ரப்பதிவுக்கான தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதால், 7 மாதங்கள்வரை பத்திரப் பதிவுகள் நடைபெறவில்லை. இதுபோன்ற அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்யக்கூடாது என பதிவுத் துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றத்திலும் முறையிடப்பட் டது.
நீதிமன்றம் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள், உத்தரவு களின் அடிப்படையில் பதிவுத் துறை சார்பில் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வந்தார்.
கொள்கை முடிவு
இந்த உத்தரவுகளை மீறி பல இடங்களில் அங்கீகாரம் இல் லாத மனைகளை பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளி யாகின. சொந்த ஆதாயத்துக்காக சில பதிவாளர்கள் வெவ்வேறு காரணங்களைக் கூறி பத்திரப் பதிவுகள் மேற்கொண்டதும் தெரிந் தது. அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்வதில் நீதிமன்றம் கடுமையாக உள்ள நிலையில், இவ்வழக்கு வரும் 28-ம் தேதி மீண்டும் விசார ணைக்கு வர உள்ளது.
அதற்குள் அரசு தனது கொள்கை முடிவை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அப்போது, அங்கீகாரம் பெறப் படாத நிலங்களை பதிவு செய்ய புதிய கொள்கை முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மாநில பத்திரப் பதிவுத் துறை தலைவர் கடந்த 22-ம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
அங்கீகாரம் இல்லாத மனை களை பதிவு செய்யக்கூடாது என ஏற்கெனவே உத்தரவிடப் பட்டுள்ளது. இதையும் மீறி, பல பத்திரப்பதிவு அலுவலர்கள் அங்கீ காரம் இல்லாத மனைகளை பதிவு செய்துள்ளது கவனத்துக்கு வந் துள்ளது. இந்த மனைகள் குறித்த முழுமையான விவரங்களை வரும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக் குள் எனக்கு அனுப்பவும் என தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் அச்சம்
இந்த உத்தரவால் நீதிமன்றம், துறையின் உத்தரவுகளை மீறி அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்துள்ள பத்திரப்பதிவு அலுவலர்கள், தொடர்புடையோர் கலக்கமடைந்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்கு பிந்தைய காலத் தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டி ருந்தால், அது சம்மந்தப்பட்ட பத் திரப்பதிவு அலுவலர்கள் உள் ளிட்ட பலரும் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல் களுக்கு உள்ளாக நேரிடும் என பதிவுத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT