Published : 22 Nov 2013 04:31 PM
Last Updated : 22 Nov 2013 04:31 PM
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் நலம் தேறியதையடுத்து, டெல்லி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
டெல்லி ராஜாஜி மார்க்கில் இருக்கிறது அப்துல் கலாமின் வீடு. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த அப்துல் கலாம், உடல்நலம் சரியில்லை எனக் கூறியதை அடுத்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கலாமை பரிசோதனை மருத்துவர்கள் அவருக்கு அவருக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். ரத்த அழுத்தம், இதய செயல்பாடுகள் சீராகவே இருப்பதால் வேறு பிரச்சினை ஏதும் இல்லை. அவரை மூன்று நான்கு தினங்களில் கலாம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என தெரிவித்தனர்.
கடந்த மூன்று மாதங்களாக ஓய்வில்லாமல் சுற்றுப் பயணம் செய்து மேற்கொண்டிருந்தால் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அப்துல் கலாம் டிஸ்சார்ஜ் செய்து தற்போது புது டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டில் கலாம் ஓய்வு எடுத்து வருகிறார்.
கலாம் தற்போது நன்றாக இருக்கிறார் எனவும், வழக்கமான பணிகளில் ஈடுபடுகிறார் எனவும், ஒரு வாரம் மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்கச் சொல்லியிருப்பதாக ராமேஸ்வரத்தில் கலாமின் உறவினர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT