Published : 24 May 2017 09:54 AM
Last Updated : 24 May 2017 09:54 AM

ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு: லண்டன் நூலகத்தின் ஒளிப்பட ஆவணத்தில் தகவல்

முதலாம் ராஜேந்திர சோழன் வங்காள படையெடுப்பின்போது கோதாவரி ஆற்றின் தென்கரை யோடு திரும்பிவிட்டான் என்பதே இதுநாள் வரை வரலாற்று ஆய் வாளர்களின் கூற்று. ஆனால், வட கரைக்கும் சென்று போரிட்டான் என்பதற்கான ஆவணம் தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைத்திருக்கிறது.

கங்கைகொண்ட சோழன், கங்கைகொண்ட சோழீச்சரம், கங்கைகொண்ட சோழபுரம் இவை கள் குறித்து முழுமையான ஆய்வு நூல் ஒன்றை எழுதி முடித்திருக் கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். இதற்காக மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, கம்போடியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக் குச் சென்றவருக்கு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் 2 அரிய ஒளிப்படங்கள் கிடைத்தன.

அதுகுறித்த விவரங்களை ‘தி இந்து’விடம் பகிர்ந்து கொண்ட குடவாயில் பாலசுப்ரமணியன் கூறியதாவது:

ராஜேந்திரனின் படைகள் வங்கப் போரை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதன் அடையாள மாக கங்கை நீரை எடுத்துக்கொண்டு கோதாவரி நதிக்கரைக்கு வந்தன. தனது படைகளை அங்கிருந்து வரவேற்ற ராஜேந்திரன், அவர்களை அழைத்துக்கொண்டு தற்போது ஒடிசா என்று அழைக்கப்படும் ‘ஒட்டர தேயம்’ மீது படையெடுத்து அங்கிருந்த மன்னர்களையும் வீழ்த்தினான்.

இதனை ஒடிசா மாநிலம் மகேந் திரகிரி மலை மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர் மற்றும் குந்திதேவி கோயில்களில் உள்ள கல்வெட்டுச் சான்றுகள் மெய்பிக்கின்றன. யுதிஷ் டிரர் கோயில் கருவறையின் நிலை வாயிலுக்கு மேலாகக் காணப்படும் கல்வெட்டில் தமிழிலும் சமஸ் கிருதத்திலும் பதிவுகள் உள்ளன. அதில், ‘ராஜேந்திர சோழன் தன்னுடைய தோள் வலிமையால் விமலாதித்தனையும், மலைநாட்டு அரசர்களையும், கலிங்க அரசனை யும் வென்று மகேந்திர மலை உச்சி யில் விஜயஸ்தம்பத்தை நாட்டி னான்’ என்று குறிப்பு உள்ளது. இக்கல்வெட்டுக்குக் கீழே, வரை கோட்டு வடிவில், அமர்ந்த நிலை யில் புலியின் ஊருவமும் 2 மீன் களின் உருவங்களும் சோழர் இலச் சினையாகக் காணப்பெறுகின்றன.

குடவாயில் பாலசுப்ரமணியன்

அருகில் உள்ள குந்தி கோயில் வளாகத்தில் மூன்று நான்கு துண்டு களாகக் கிடக்கும் கல்வெட்டில், மகேந்திர கிரியில் விஜயஸ்தம்பம் நாட்டிய குறிப்பும், ஒடிசா மன்னனின் பட்டத்து யானையைக் கொன்ற ராஜேந்திரனின் தலைமை தளபதி (மகாநாயகன்) ராஜேந்திர சோழ பல்லவரையனான ராஜராஜ மாராயன் என்பானுக்கு மகேந்திர கிரீஸ்வரத்தில் வீர அங்குசம் பரி சாக அளிக்கப்பெற்றதும், ‘விட்டி வீரண மல்லன்’ என்ற விருது அளிக்கப்பெற்றதும் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.

இந்தத் தகவல்கள் எதுவும் நம் வசம் இல்லை. ஆனால், பிரிட் டிஷ் நூலகத்தில் ‘இந்தியன் கலெக்‌ ஷன்ஸ்’ என்ற பிரிவில் இந்தத் தகவல்களை ஒளிப்பட ஆவணங் களாக வைத்திருக்கிறார்கள். இந்த ஆவணத்தின் மூலம், ராஜேந்தி ரன் கோதாவரி ஆற்றின் தென் கரையோடு திரும்பவில்லை; வடகரைக்கும் சென்று போரிட்டான் என்பது உறுதியாகிறது.

நூலகத்தில் இன்னொரு முக்கியமான ஒளிப்படத்தையும் பார்த்தேன். ராஜேந்திரன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோயிலின் கிழக்கு இரண்டாவது கோபுரம் தற்போது மொட்டைக் கோபுரமாக உள்ளது. ஆனால், 19-ம் நூற்றாண்டில் இது மூன்று நிலைகளைக்கொண்ட முழுமை பெற்ற கோபுரமாக இருந்துள்ளது. இதன் அரிய ஒளிப்படமும் அருங்காட்சியகத்தில் எனக்குக் கிடைத்தது. இந்த ஒளிப்படங்களை பிரிட்டிஷ் நூலகத்தின் சிறப்பு அனுமதியுடன் நகல் எடுத்து வந் துள்ளேன். இவ்வாறு குடவாயில் பாலசுப்ரமணியன் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x