Last Updated : 15 Sep, 2016 09:10 AM

 

Published : 15 Sep 2016 09:10 AM
Last Updated : 15 Sep 2016 09:10 AM

தமாகாவில் உழைப்புக்கு அர்த்தம் இல்லை: அதிமுகவில் இணைந்த சாருபாலா தொண்டைமான் கருத்து

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் 2001-2006 மற்றும் 2006-2009ம் ஆண்டுகளில், காங்கிரஸ் சார் பில் திருச்சி மாநகராட்சி மேயராக இருந்தவர் சாருபாலா தொண்டைமான். 2009 மக்க ளவைத் தேர்தலில் திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக் கப்பட்டதை அடுத்து, தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

அத்தேர்தலில் தோல்வி யடைந்த அவர், 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றிவாய்ப்பை இழந்தார்.

2014 மக்களவைத் தேர்த லுக்குப் பிறகு ஜி.கே.வாசன் காங்கிரஸில் இருந்து பிரிந்து தமாகாவை மீண்டும் தொடங்கிய போது, சாருபாலாவும் காங்கிர ஸில் இருந்து வெளியேறி தமாகா வில் சேர்ந்தார். இந்நிலையில், சென்னையில் முதல்வர் ஜெயல லிதா முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைந்தார்.

இதுகுறித்து சாருபாலா தொண் டைமான் கூறியது: பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதல்வர் ஜெயலலிதா விடம் ஓங்கியுள்ளது. இது, ஒரு பெண்ணான எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. குறிப் பாக, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது என்னை மிகவும் கவர்ந்தது. எனவேதான் அதிமுகவில் இணைந்தேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் நல்ல கூட்டணியை ஜி.கே.வாச னால் அமைக்க முடியவில்லை. மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்ததில் என்னைப்போல பல தலைவர்களுக்கும் விருப்பம் இல்லை.

அடிமட்ட நிலையில் இருந்து கட்சிப் பணியாற்றி வந்தோம். ஆனால், எந்தப் பயனும் இல்லை. மாநகரில் 10 சதவீத நிர்வாகிகளைத் தவிர, எஞ்சிய அனைவரும் என்னு டன் அதிமுகவில் இணைந்து விட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக தமாகாவுக்காக அதிகம் உழைத் தும், எவ்விதப் பயனும் இல்லை. உழைப்புக்கு அர்த்தமே இல்லாத தால், தமாகாவில் இருந்து வெளி யேறிவிட்டேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x