Published : 24 Oct 2014 11:01 AM
Last Updated : 24 Oct 2014 11:01 AM
சென்னையில் தாழ்வான பகுதி களில் மழை நீர் புகுவதை தடுக்கும் வகையில் ரூ.3.62 கோடி யில் அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் சீரமைக்கப் படுகின்றன. போர்க்கால அடிப் படையில் அடுத்த வாரத்துக்குள் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட் டுள்ளது.
சென்னையில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு ஆறுகள், கால்வாய்கள் தூர்வாரப் படும். ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு நீர்வழிப்பாதை சீரமைக்கப்படும். இந்த ஆண்டு இப்பணியை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.3.62 கோடியை ஒதுக்கியுள்ளது.
நேப்பியர் பாலம் முதல் மதுரவாயல் பாலம் வரை 17 கி.மீ. தூரத்துக்கு கூவம் ஆற்றிலும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் இருந்து மணப்பாக்கம் மிலிட்டரி பாலம் வரை 25 கி.மீ. நீளத்துக்கு அடையாறு ஆற்றிலும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல முட்டுக்காடு முகத்து வாரம், கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் முகத்துவாரம் ஆகிய இடங்களில் மணல் திட்டுகள் அகற்றப்படுகின்றன.
இதுதவிர வடக்கு, மத்திய, தெற்கு பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம் பாக்கம் கால்வாய், வேளச்சேரி வீராங்கல் ஓடை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வரும் கால்வாய், மாதவரம் தணிகாசலம் கால்வாய், புழல் ஏரியின் உபரிநீர் கால்வாய், மணப்பாக்கம் ராமாபுரம் வடிகால்வாய் மற்றும் கீழ்கட்டளை, ஆதம்பாக்கம், ஒட்டியம்பாக்கம், சிட்லபாக்கம், செம்பாக்கம் ஏரிகள் ஆகியவற்றின் உபரிநீர் கால்வாய்களில் திடக்கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றி, சுத்தம் செய்து மழைநீர் தங்கு தடையின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி களில் உள்ள ஆறுகள், கால்வாய் களை தூர்வாரி, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே இப்பணிகள் நடந்தன. இந்த ஆண்டு தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தாமத மானது. கடந்த 15-ம் தேதிதான் இப்பணி தொடங்கியது. இதற்காக ரூ.3.62 கோடியை அரசு ஒதுக்கி யுள்ளது.
ஆறுகள், கால்வாய்கள் சீரமைப்புப் பணியில் 43 வேலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 35 பொக்லைன்கள், 8 மிதவை இயந்திரங்களுடன் 200 தொழிலா ளர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட் டுள்ளனர். கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்கள், வடிகால்கள் போன்றவற்றில் மக்கள் திடக்கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் இரவு நேரங்களில் மருத்துவக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், ஓட்டல் கழிவுகள், கட்டிட இடிபாடுகள், மார்க்கெட் கழிவுகள் போன்றவற்றை திருட்டுத்தனமாக கொட்டிவிட்டு போகின்றனர். அதனால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கும் பணிக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. இப்பணியால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கு வது, தாழ்வான பகுதிகளுக் குள் மழைநீர் புகுவதும் தடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT