Published : 14 Feb 2017 08:19 AM
Last Updated : 14 Feb 2017 08:19 AM
ஆட்சியமைக்க போதுமான ஆதரவைப் பெறுவது மற்றும் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காதது குறித்து, அதிமுக எம்எல்ஏக்களுடன் 3-வது நாளாக சசிகலா நேற்று ஆலோசனை செய்தார். அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூரிலேயே அவரும் தங்கினார்.
கூவத்தூர் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா நேற்று 3-வது நாளாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக தொண்டர்களின் வேகத்தை யாரும் கணக்கிட முடி யாது. அது புயல் மாதிரி இருக் கும். தமிழகத்தில் 1984-ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடந்தது. அப் போது எம்ஜிஆர் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந்ததால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று திமுகவினர் நினைத்தனர். கணக்கு போடுவதில் திமுகவினர் உஷாராக இருப்பார்கள். அப்போது, அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
எம்ஜிஆர் இறந்த பிறகு, அதிமுக இரு குழுகளாக பிரிந்து செயல்பட்டது. அப்போதும் ஜெயலலிதா அணிதான் வெற்றி பெற்றது. பிறகு கட்சியை ஜெயலலிதா ஒன்று சேர்த்தார். அதன்பிறகு தற்போது கட்சிக்கு சோதனை உருவாகியுள்ளது.
எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருப்பதாக பன்னீர் செல்வம் தரப்பினர் கூறுகின் றனர். எம்எல்ஏக்கள் என்ன மிருகங்களா, அடைத்து வைப் பதற்கு. இங்குள்ளவர்களின் முகத் தில் சந்தோஷம் இருக்கிறது. ஒற்றுமையாக குடும்பமாக இருக் கிறோம். அதனால்தான் நானும் இங்கே வந்து தங்கிவிடுவோம் என்று நினைத்தேன். நாளைக்கு எல்லோரும் சேர்ந்து கோட் டைக்கு போகலாம். நாம் ரொம்ப அமைதியாக செயல்பட வேண் டும். மக்களிடம் கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
எம்எல்ஏக்களின் வீட்டுக்கு போய் உறவினர்களை பன்னீர் செல்வம் தரப்பினர் மிரட்டுகின் றனர். மீதியுள்ள நான்கரை ஆண்டு ஆட்சியை நடத்தப்போவது நாம்தான். யாருக்கும் தொந்தரவு கொடுக்கக்கூடாது. அமைதி வழியில் நடக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். நாளைக்கு நாம் இங்கிருந்து போகும்போது சந்தோஷமாத்தான் போகப் போகிறோம்.
ஜெயலலிதா அனைத்து இடங் களிலும் அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். மக்களின் பசி தீர்த்த தலைவர்களின் வழியில் நாம் வந்திருக்கிறோம். தர்மம் நிச்சயம் தலைகாக்கும். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே சென்று தீர்த்துவைக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயரை நாம் எல்லோரும் உயிர் உள்ளவரை ஒன்றுமையாக இருந்து காப்பாற்ற வேண்டும். ஜெயலலிதாவின் நினைவிடம் அதிசயம் மிக்க வகை யில் பிரம்மாண்டமாக கட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கூவத்தூருக்கு காரில் வந்த சசிகலா விடுதிக்கு செல்லும் பகுதியில் வசிக்கும் பெண்கள் சிலரை சந்தித்து பேசினார். அப்பகுதியில் வசிக்கும் விநாயகம்-புனிதா தம்பதியின் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டினார். பின்னர், அங்கிருந்து விடுதிக்கு புறப்பட்டு சென்றார்.
பின்னர், சசிகலா எம்எல்ஏக் களுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இத னால், அவ்வப்போது ஆலோ சனைக்கு பிறகு கூவத்தூர் விடுதியிலேயே சசிகலா தங்கி னார். இதற்காக, விடுதியில் பிரத் யேகமாக அறை ஒன்று தயார் செய்யப்பட்டதாக கூறப்படு கிறது.
மாவட்ட எஸ்பி முகாம்
கூவத்தூரில் தனியார் விடுதி யில் எம்எல்ஏக்களுடன் சசிகலா தங்கியுள்ளதால், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி முத்தரசி அப் பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT