Published : 22 Jan 2017 02:23 PM
Last Updated : 22 Jan 2017 02:23 PM

கடந்த ஆண்டில் ரயில் நிலையங்களில் காணாமல் போன 2,128 குழந்தைகள் மீட்பு

கடந்த ஆண்டில் ரயில் நிலை யங்களில் காணாமல் போன 2,128 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. இதில், தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சராசரியாக 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர். பெற்றோர் திட்டு வதால் கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறுவது, மிரட்டி பணம் வாங்குவதற்காக சமூக விரோதி களால் கடத்தப்படுவது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக கடத்துவது போன்றவையே குழந் தைகள் காணாமல் போவதற்கு முக்கிய காரணங்கள்.

எண்ணிக்கை அதிகரிப்பு

ரயில் நிலையங்களில் குழந்தை கள் காணாமல் போவது சமீபகால மாக அதிகரித்து வருகிறது. தமிழ கத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் 2015-ல் காணாமல்போன 1,250 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மொத்தம் 2,128 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த குழந்தைகள் 1,594 பேர். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த குழந்தை கள் 534 பேர் என்பது குறிப்பிடத் தக்கது. சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் அதிகபட்சமாக 923 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காட்பாடியில் 149 பேரும் எழும்பூரில் 101 பேரும், ஈரோட்டில் 94 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு கமிட்டி

இது தொடர்பாக ரயில்வே போலீஸ் எஸ்பி விஜயகுமார், ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘ரயில் நிலையங்களில் காணாமல் போகும் குழந்தைகளை மீட்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படை, தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இதுதவிர, முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கமிட்டி அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருகி றோம். சென்னை ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் உள்ள 23 முக்கிய ரயில் நிலையங்களில் கடந்த 2015-ம் ஆண்டில் 1,250 குழந்தைகள் மீட்கப் பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 2,128 குழந்தைகளை மீட்டு, உரி யவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்’’ என்றார்.

குழந்தைகள் மீட்புக்கான புரோ-சிகா சமூக சேவை மையத்தின் உதவி இயக்குநர் எஸ்.சுரேஷ் கூறும்போது, ‘‘பெற்றோர் பிரிந் திருத்தல், வேறொரு திருமணம், கடன் தொல்லை, வறுமை, 10, 12-ம் தேர்வில் தோல்வி பயம் உள்ளிட்ட காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறியதாக குழந்தை கள் தெரிவிக்கின்றனர்.

கவுன்சலிங்

பிற மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளை சில இடைத்தரகர்கள் அழைத்து வந்து இங்கு நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களாக வைத்துக் கொள்கிறார்கள். இவர்களில் சிலர் எப்படியாவது வீட்டுக்கு செல்ல வேண்டுமென கூறி ரயில் நிலையங் களில் தடுமாறி நின்று கொண்டி ருப்பதையும் காண முடிகிறது. மீட்கப்படும் குழந்தைகள், அவர் களின் பெற்றோருக்கு தொடர்ந்து கவுன்சலிங் அளித்து வருகிறோம். மீட்கப்படும் குழந்தைகளில் 50 சதவீதம் பேர் மீண்டும் கல்வி கற்க ஏற்பாடு செய்து வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x