Published : 20 Mar 2014 01:10 PM
Last Updated : 20 Mar 2014 01:10 PM
பாஜக கூட்டணியில் திருப்பூர் தொகுதியை கொமதேக-வுக்கு ஒதுக்க பாஜக சம்மதித்துள்ளது.
பாஜக கூட்டணியில் கொமதேக 3 இடங்களை கேட்டு இறுதியில் ஒரு இடத்துக்கு இறங்கி வந்தது. பாஜக சின்னத்திலேயே போட்டியிட சம்மதித்த அக்கட்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் இதில் ஏதாவதொரு தொகுதி தங்களுக்கு வேண்டும் என கேட்டது. ஆனால், கோவை தங்களுக்கும் திருப்பூர் தேமுதிக-வுக்கும் ஈரோடு மதிமுக-வுக்கும் வேண்டும் என சொன்ன பாஜக, கொமதேக-வுக்கு நாமக்கல்லை ஒதுக்க சம்மதித்தது.
ஆனால், நாமக்கல் தொகுதியிலும் தேமுதிக தனது வேட் பாளரை அறிவித்ததால் அதிர்ந்து போன கொமதேக, 14 தொகுதிகளில் தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு வந்தது. இதை சமாளிப்பதற்காக தேமுதிக-விடமிருந்து திருப்பூரை கொமதேக-வுக்காக கேட்டு வாங்கியது பாஜக. ஆனால், திடீர் திருப்பமாக திருப்பூர் தொகுதியில் பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனுக்கு வேண்டும் என பாஜக-வில் இன்னொரு தரப்பு அழுத்தம் கொடுத்தது.
இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் நம்மிடம் பேசியவர்கள், ’’வானதி சீனி வாசனுக்கு திருப்பூரை ஒதுக்கிவிட்டு கொமதேக-வுக்கு கரூரை தருவதாக பேசினார்கள். ஆனால், அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. கூட்டணி யைவிட்டு கொமதேக வெளியே றினால் அதன் பாதிப்பு பத்துக் கும் மேற்பட்ட தொகுதிகளில் எதிரொலிக் கும். இதுகுறித்து செவ்வாய்க் கிழமை நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது. இதையடுத்தே கொமதே க-வுக்கு திருப்பூரை தந்துவிடுவது என்ற முடிவுக்கு மாநிலத் தலைமை வந்தது’’ என்று சொன்னார்கள்.
பாஜக-வின் இந்த மனமாற்ற முடிவை அடுத்து கொமதேக-வின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென் னையில் இன்று நடக்கிறது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, திருப்பூர் தொகுதியில் கொமதேக வேட்பாளராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் போட்டியிடுவது குறித்து முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT