Published : 11 Aug 2016 10:05 AM
Last Updated : 11 Aug 2016 10:05 AM
‘எலிபாஸ் மேக்ஸிமஸ்’ என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட, உலகில் வாழும் மிகப்பெரிய தரைவாழ் விலங்கான யானை, ஆப்பிரிக்க காடுகளிலும், இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் வாழும் இனமாகும்.
ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் இருக்கும். தந்தம் இல்லாத ஆண் யானையை ‘மக்னா’ என்று அழைக்கின்றனர். சில பெண் யானைகளுக்கு சிறிய அளவில் தந்தம் உள்ளது. 13-க்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளில் 40 ஆயிரம் யானைகள் உள்ளன. அவற்றில் 30 ஆயிரம் யானைகள் இந்தியாவில் உள்ளன. வளமான வனங்களுக்கு ஆதாரமாக விளங்கும் யானை களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
20-ம் நூற்றாண்டின் தொடக் கத்தில் ஆசிய யானைகள் எண் ணிக்கை ஒரு லட்சமாக இருந் துள்ளது. கடந்த 3 தலைமுறை களில் அவை 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்துவிட்டன. ஆசிய நாடுகளில் வசிக்கும் யானைகளில் நான்கில் 3 பங்கு இந்திய காடுகளில் வாழ்கின்றன. எண்ணிக்கையில் குறைந்து வந்த யானைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக 1992-ல் இந்தியாவில், ‘யானைகள் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம், 16 மாநிலங்களில் அமலுக்கு வந்தது.
யானைகள் கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறுகிறது. 2012 கணக்கெடுப் பின்படி, தமிழகத்தில் 4 ஆயிரம் யானைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. நீலகிரி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள், நீலகிரி பீடபூமி, காவிரி பாயும் பகுதி, நிலம்பூர் அமைதிப் பள்ளத்தாக்கு, கோவை மற்றும் மதுரை - பெரியார் வாழ்விடப்பகுதி, ஆனைமலை பரம்பிக்குளம், அசம்பு மலைகள் உள்ளிட்டவை தமிழகத்தில் யானைகள் வாழ்விடப் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன.
யானைகள் இறப்பு விகிதம்
மனிதர்களின் பலவித செயல் பாடுகளால் யானைகள் கொல்லப் படுகின்றன. வேட்டையால் 59 சதவீதம், விஷ உணவால் 13 சதவீதம், நோய்த் தாக்குதலால் 10 சதவீதம், மின்சாரம் பாய்ந்து 8 சதவீதம், ரயிலில் அடிபட்டு 5 சத வீதம், பிற காரணங்களால் 5 சதவீத யானைகள் உயிரிழக்கின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு இயற்கை பாதுகாப்புச் சங்கத் தலைவர் வ.சுந்தரராஜு கூறும் போது, “இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் யானைகளின் எண் ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள் ளது. இது நல்ல முன்னேற்றம் என்றாலும், தமிழகத்தில் கோவை மாவட்ட வனப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் 24 யானைகள் இறந்துள்ளன. அதிலும், கடந்த 40 நாட்களில் 10 யானைகள் இறந் துள்ளது மிகவும் துயரமானது.
யானைகள் இல்லையென்றால் வனம் இல்லை. வனம் இல்லை யெனில் மனித வாழ்வு கேள்விக் குறியாகிவிடும். வலசை பயணம் மேற்கொள்ளும் ‘காரிடார்’ இணைப்புப் பகுதி மற்றும் வாழ் விடங்களை இணைக்கும் தாழ் வாரங்களைப் பாதுகாப்பது அவசியம். இரண்டு பெரிய வனப் பகுதியை இணைக்கும் குறுகிய காடுகளே இப்பகுதி. இவ்வழி யாகவே ஆண்டுதோறும் ஓரிடத்தில் இருந்து வேறிடத்துக்கு யானைகள் வலசை செல்கின்றன.
இந்த இடங்கள் தற்போது குறுகி, தரம் குறைந்துவிட்டதால், யானைகளின் இயற்கையான நடமாட்டம் தடுக்கப்பட்டு, மனிதர் களுக்கு யானையால் இடர் பாடு ஏற்படுகிறது. மேலும், இப்பகுதி யில் இருப்புப் பாதைகள் உரு வாக்கப்பட்டதால், ரயிலில் சிக்கி இறக்கும் யானைகளின் எண் ணிக்கையும் அதிகரித்து விட்டது.
இந்தச் சோகம் இனியும் நேராமல் தடுக்க, யானைகள் நடமாட்டம் உள்ள காலங்களில் ரயிலின் வேகத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வனத் துறை அறிமுகப்படுத்தவுள்ள ஆளில்லா குட்டி விமானம் மூலம், யானைகளின் நடமாட்டத்தை கண் காணிப்பதால் ஓரளவு பலன் கிடைக்கும்’’ என்றார்.
யானைகள் திட்டம்
யானைகளின் வாழ்விடங்கள் மற்றும் வலசை போகும் பாதைகளைப் பாதுகாத்து அவற்றை மேம்படுத்துதல். வாழ்விடங்களை அறிவியல்பூர்வமாக மேலாண்மை செய்து, அங்கு யானைகளின் எண்ணிக்கையை தேவையான அளவில் இருக்க நடவடிக்கை எடுத்தல். மனிதர்கள் மற்றும் யானைகளுக்கு இடையிலான முரண்பாடுகளை களைய முயற்சி மேற்கொள்ளுதல். வேட்டை, பிற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்தல். யானைகள் மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சி செய்தல். மக்களிடம் யானைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல். சூழல் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தல். மருத்துவ வசதி செய்வது. மறுவாழ்வு மற்றும் மீட்பு மையங்களை உருவாக்குதல் ஆகியவை யானைகள் திட்டத்தில் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT