Published : 17 Jun 2017 09:39 AM
Last Updated : 17 Jun 2017 09:39 AM
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்லத்தான் கேட்டிருக்கிறோம். ஆனால், ’’பாம்பு அப்படியெல்லாம் பார்த்து நடுங்க வேண்டிய உயிரினம் அல்ல’’ என்கிறார் வால்பாறை ஃபிராங்க்பெஞ்சமின்.
41 வயதான ஃபிராங்க் கடந்த 20 ஆண்டுகளில் வால்பாறை எஸ்டேட் குடியிருப்புகளில் புகுந்த ஆயிரக்கணக் கான பாம்புகளை அவைகளுக்கு சிறு காயம்கூட ஏற்படாமல் பிடித்து அவற் றின் வழித்தடங்களில் கொண்டுபோய் விட்டுள்ளார். இந்தப் பாம்பு நேசரை இத்தனை ஆண்டுகளில் ஒரு தடவைகூட பாம்பு தீண்டியதில்லை; அந்தளவுக்கு லாவகம்.
வால்பாறை பகுதியில் எந்த இடத்தில் பாம்பு புகுந்தாலும் வனத்துறையே முதலில் ஃபிராங்கைத்தான் தேடுகிறது. அந்தளவுக்கு பாம்புகளை காப்பாற்று வதில் அக்கறையாளனாய் இருக்கிறார். அண்மையில், இங்குள்ள 3 ரேஷன் கடை களில் ஒரே வாரத்தில் 15 பாம்புகள் புகுந்து விட்டன. அவைகளை பத்திரமாய் பிடித்துக் கொண்டுபோய் காட்டில் விட்டது ஃபிராங்க்தான்.
13 வயதில் பழகினேன்
’’எனக்கு 13 வயதிருக்கும்போது, பாம்பு பிடித்து காட்டுக்குள் கொண்டு போய் விடும் ஒருவரை டி.வி-யில் பார்த்தேன். அதிலிருந்தே நானும் விளையாட்டுப் போக்கில் பாம்புகளை பிடிக்க ஆரம்பித்துவிட் டேன். அப்படியே, பொது வான மற்ற உயிரினங்கள் மீதும் எனக்கு பரிவு ஏற் பட்டதால் சில விஷயங் களில் வனத்துறைக்கு நானே வலியப்போய் உதவ ஆரம்பித்தேன்.
ஒருகட்டத்தில், பிடிக் கப்பட்டு காட்டுக்குள் கொண்டு போய் விடும்வரை பாம்புகள் எத்தகைய வலிகளை எதிர்கொள்ளும் என அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்காக கர்நாடகாவில் உள்ள பாம்பு ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். அங்குதான், முறைப்படி பாம்புகளைப் பிடிக்கும் கலையைக் கற்றேன்.
ஸ்நேக் ஷியாம் அறிமுகம்
பாம்புகள் ஆராய்ச்சியாளரான ‘ஸ்நேக் ஷியாம்’ என்பவரது அறிமுகம் அங்கே எனக்குக் கிடைத்தது. ’ஒவ்வொரு பாம்பை பிடிக்கும்போதும் இப்போதுதான் முதல் பாம்பைப் பிடிக்கிறோம் என்ற எச் சரிக்கை உணர்வுடனும் விழிப்புடனும் செயல்பட ணும். சிலபேர், ’பாம்பை சீறவையுங்க; முத்தம்கொடுங்க’ என்றெல்லாம் சொல் லுவாங்க அதையெல்லாம் மண்டையில ஏத்திக்கக் கூடாது. இதையெல்லாம் எனக்கு ஷியாம் தான் சொல்லித் தந்தார்.’’ என்கிறார் ஃபிராங்க்.
பாம்பு பிடிக்கப்போகும் இடங்களில், பாம்புகளை எப்படி பிடிக்க வேண்டும். அவைகளை எங்கே கொண்டுபோய் விடவேண்டும் பாம்பு கடித்தவர் களுக்கு எத்தகைய முதலுதவி சிகிச்சைகளைச் செய்ய வேண்டும் என்பது குறித்தெல்லாம் மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் இந்த ஃபிராங்க்.
ஃபிராங்க் டிப்ஸ்..
பொதுவாக பாம்புகளில் உள்ள விஷம் அதன் உணவுச் செரிமானத்திற்கே பயன்படுகிறது. எனவே, கொத்தும்போதெல்லாம் அவை கொடிய விஷத்தைக் கக்குவதில்லை. தங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் மட்டுமே தற்காப்புக்காக பாம்புகள் விஷப் பிரயோகம் செய்கின்றன. ஒருமுறை விஷத்தை உமிழ்ந்தால் மீள்உற்பத்தி செய்ய நீண்ட நேரம் பிடிக்கும். எனவே, விஷத்தின் அருமை பாம்பு களுக்குத் தெரியும். அதனால், தேவையில்லாமல் விஷத்தை அவை வீணடிக்காது.
பாம்பு கடிக்கு மூலிகை வைத்தியம் என்பதெல்லாம் கண்துடைப்பு. இதற்கென உள்ள விஷமுறிவு மருந்துகளே உயிரைக் காக்கும். பாம்புகளைப் பிடித்தால் தூரமாய் கொண்டுபோய் விடவேண்டும் இல்லாவிட்டால் திரும்ப வந்துவிடும் என நினைப்பதும் தவறு. பாம்புகள் பொதுவாக 2 கி.மீ. சுற்றளவுக்குள் தான் ஊரும். அதற்குள்ளேயே எங்கெல்லாம் பொந்துகள், இரைகள் இருக்கும் என்பது அவைகளுக்குத் தெரியும். எனவே, அத்தகைய இடங்களைப் பார்த்து அங்கு கொண்டுபோய் பாம்புகளை விட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் எதிரிகளிடம் சிக்கி ஆபத்தில் மாட்டிக் கொள்ளும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT