Published : 16 May 2017 07:11 PM
Last Updated : 16 May 2017 07:11 PM

ரஜினியின் அரசியல் பேச்சால் கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்

ரஜினி பேசிய பேச்சை அரசியல் தலைவர்கள், அறிவுஜீவி வட்டாரங்கள் மறுபடியும் குழப்ப அரசியல் என வர்ணித்தாலும், எளிய மக்கள், 'என்ன ரஜினி அரசியல்கட்சி ஆரம்பிக்கப் போறாராமே?' என்று ரொம்ப சகஜமாக கேட்குமளவுக்கு பாப்புலராகியிருக்கிறது. அவரின் ரசிகர்களோ கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

இதுகுறித்து கோவை ரசிகர்கள் சிலரிடம் பேசியபோது அவர்கள் கூறியதாவது. ‘நாங்கள் இதைத்தான் தலைவர் ரஜினியிடம் எதிர்பார்த்தோம். எந்த நேரத்தில் எப்படி, எங்கே வெளிப்படுத்த வேண்டுமோ அங்கே வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் மிகவும் அழுத்தமானவர். அரசியலுக்கு வரமாட்டேன் என்று இதுவரை சொல்லி வந்தவர், ‘இனிமேல் வரமாட்டேன் என்று சொல்ல மாட்டேன்!’ என்று சொல்லியிருக்கிறார். இதற்கு மேல் என்ன வேணும். அதை விட கெட்டவங்க, சம்பாதிக்கணும்ன்னு நோக்கமுள்ளவங்க யாரும் இருக்காதீங்க!’ன்னு சொல்றார். அப்படின்னா என்ன அர்த்தம்? தற்போதுள்ள நிலையில் அரசியல் ஊழலுக்கானதாக ஆகி விட்டது. அப்படிப்பட்ட அரசியல் செய்ய மாட்டேன். அப்படிப்பட்டவங்க எங்கிட்ட வராதீங்க; இங்கே இருக்காதீங்க’ என்கிறார். அப்படின்னா புது கட்சியைத்தான் ஆரம்பிக்கப் போறார். அதில் ஏற்கனவே ஊழல்ல ஊறின மற்ற கட்சி தலைகளை சேர்க்க மாட்டேன் என்கிறார்!’ எனத் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தின் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘நாங்கள் ரசிகர்கள் புரிந்து கொள்வதை விட, சாதாரண பொதுமக்கள் அரசு ஊழியர்கள் கூட அவர் பேச்சை புரிந்து கொண்டுள்ளார்கள். பொதுவாக ரஜினி பொருளில்லாமல், புரியாமலே பேசுவார். இப்போது தெளிவாக பேசியிருக்கிறார். ‘நான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போறேன்; சம்பாதிக்கணும்ன்னு ஆசையா இருக்கிறவன் வெளியே போ என்று சொல்கிறார்!’ என்கிறார் எனக்கு தெரிந்த ஓர் அரசு ஊழியர். மற்றவர்கள் யாரெல்லாமோ இருக்க, அவர் எஸ்.பி. முத்துராமனை மேடையேற்றி பேசியதிலும் பெரியதொரு அர்த்தம் உண்டு. அரசியலுக்கு ரஜினி வரவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களில் முதன்மையானவர் அவர். அதே சமயம் மற்ற கட்சிகளோடு சேராதே; தனியாக நின்று தனித்தன்மையை காட்டு, மக்கள் சப்போர்ட் செய்வார்கள். ஒரு வேளை சப்போர்ட் மக்கள் செய்யலைன்னா அது அவங்களுக்கான தோல்வின்னு எடுத்துச் சொல்பவர். எனவே அவர் உடன் வந்தது கூட தனிக்கட்சி என்பதை சிம்பாலிக்காக காட்டத்தான் என புரிந்து கொள்கிறோம்!’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x