Published : 11 Feb 2017 07:58 AM
Last Updated : 11 Feb 2017 07:58 AM
ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி, பெசன்ட் நகர் கடற்கரை அருகில் இன்று (பிப்.11)நடைபெறவிருக்கிறது.
மோகினியாட்டம், பறையாட் டம், சிலம்பம் எனப் பல கலை களின் சங்கமமாக நடக்கும் இந்த விழாவை சென்னை, பெசன்ட் நகரிலிருக்கும் மீனவ கிராமமான ஊரூர் ஆல்காட் மக்களுடன் சேர்ந்து பிரபல கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா நடத்துகிறார்.
மதுமதியின் மோகினி ஆட்டமும், சிங்க் குழுவினரின் இசை நிகழ்ச்சி, மரண கானா விஜியின் கானா, கர்நாடக மாநிலத்திலிருந்து வந்திருந்த திருநங்கை குழுவினரின் ஜகோபா பக்தி இசை, ஃபிரண்ட்ஸ் கலைக் குழுவின் பறை ஆட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் இதுவரை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கின்றன.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதி யாக பெசன்ட் நகர் வரை பேருந் தில் ஓர் இசைப் பயணத்தை நடத்தினர். ஊரூர் ஆல்காட் குப் பத்தின் குழந்தைகள் எடுத்த ஒளிப் படங்களின் காட்சியை திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் திறந்து வைத்தார்.
ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவின் இறுதி நாளான இன்று மாலை 5 மணி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விநோத்குமார் குழுவினர் நடத் தும் இசை நிகழ்ச்சியில் ஊரூர் ஆல்காட் குப்பத்தின் மீனவர் களே பாடவிருக்கின்றனர். ஜெய் கிஷோர் மொசாலிகான்டி குழு வினரின் குச்சிபுடி நடனம், சமூக பிரச்சினைகளை பாடும் குரங்க னின் தமிழ் ராக் பாடல் இசை நிகழ்ச்சியும் நடக்கவிருக்கின்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT