Published : 01 May 2014 02:18 PM
Last Updated : 01 May 2014 02:18 PM
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்புக்குள்ளான கவுகாத்தி ரயிலில் இருந்த பயணி ஒருவர் சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
கிறைஸ்ட் பல்கலைக்கழக மாணவர் அர்காதீப் பானர்ஜி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்: நான் எஸ்-5 ரயில் பெட்டியில் இருந்தேன்.
அப்போது திடீரென பலத்த சத்தம் கேட்டது. மக்கள் பதற்றத்துடன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். குண்டு வெடிப்பு நடந்துள்ளது என புரிந்து கொண்டேன்.
உடனடியாக எஸ்-5 ரயில் பெட்டியில் இருந்து வெளியேறினேன். மக்கள் குழப்பத்துடன் ஓடிக்கொண்டிருக்க அங்கே இருந்த போலீசார் யாரும் எங்களுக்கு உதவ முன் வரவில்லை. பின்னர் நான் என் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு நான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்தேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT