Published : 10 Jul 2016 12:37 PM
Last Updated : 10 Jul 2016 12:37 PM
ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, கைது செய் யப்பட்டுள்ள மொஷிருதின், கடந்த ஆண்டு இறுதியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4 வாரங்கள் தங்கியி ருந்ததாக அவரது அண்ணன் மினாஜூதின் மியா தெரிவித்தார்.
ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி மேற்கு வங்கத் தில் கைது செய்யப்பட்ட மொஷி ருதின், 6 ஆண்டுகளாக திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். திருப்பூர் அருகே மங்கலம் இந்தி யன் நகரில் வசிக்கும் இவரது அண்ணன் மினாஜூதின் மியாவிடம் மேற்கு வங்க போலீஸார் விசா ரணை மேற்கொண்டனர். இந்நிலை யில், அவர் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
நான் இங்கு 10 ஆண்டுகளாக பெயின்டிங் வேலை செய்து வரு கிறேன். மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டம் லாபூர் கிராமம் எங்களது சொந்த ஊர். தம்பி மொஷிருதின் எனக்கு திருமணம் நடைபெறும் முன்பே, ஷாகி ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால், வீட்டில் மொஷிருதினிடம் யாரும் பேசுவ தில்லை. வேலை கிடைக்காமல் ஊரில் கஷ்டப்பட்டார்.
இந்த நிலையில்தான், மொஷி ருதினை திருப்பூருக்கு குடும்பத் துடன் வரவழைத்தேன். அவர், மளிகைக் கடை தொழில் செய்தார். பின், எனக்கும் திருமணம் நடந்தது. தம்பியின் நடவடிக்கைகள் எனக்கு முழுமையாகத் தெரியாது.
கடந்த ஆண்டு இறுதியில் ஜம்மு காஷ்மீருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அப்போது மடிக் கணினி எடுத்துச் சென்றார். அதைப் பற்றி என்னிடமும், ஷாகிராவிடமும் போலீஸார் விசாரித்தனர். ஜம்மு காஷ்மீருக்கு சென்றது குடும்பத்தில் அனைவருக்கும் தெரியும். அங்கு 4 வாரங்கள் தற்காலிகமாக வீடு எடுத்து தங்கியிருந்தனர். அதைப் பற்றிய விவரங்களை ஷாகிராவிடம் போலீஸார் கேட்டனர். சுற்றுலா சென்றது தெரியும். மற்ற விவரங் கள் எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மொஷிருதின் மனைவி ஷாகிரா தனது 2 பெண் குழந்தைகளுடன், மேற்கு வங்கத்துக்கு நேற்று முன்தினம் இரவு ரயிலில் புறப்பட்டார். இது குறித்து திருப்பூர் மத்திய போலீ ஸார் கூறும்போது, “மொஷிருதின் விஷயத்தில் மத்திய உளவுத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு நுண்ணறிவுப் பிரிவு என 3 பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதால், மொஷிருதின் குடும்பம் மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது” என்றனர்.
மினாஜூதின் மியா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT