Published : 28 Mar 2014 02:11 PM
Last Updated : 28 Mar 2014 02:11 PM
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் சந்தித்துக் கொண்டனர்.
சென்னையில் இருந்து மதுரை சென்ற விமானத்தில் அழகிரியும் - சிதம்பரமும் ஒன்றாக பயணித்தனர்.
மதுரை விமான நிலையம் வந்தடைந்தவுடன், விமான நிலையத்தின் வரவேற்பு அறையில் இருவரும் சிறிது நேரம் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 9 ஆண்டுகள் அங்கம் வகித்திருக்கிறோம். அந்த வகையில் பொதுவான விஷயங்கள் குறித்து பேசினோம் என்றார். இருப்பினும் பேச்சின் விபரங்களை அழகிரி தெரிவிக்கவில்லை.
கடந்த செவ்வாய் கிழமை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் மு.க.அழகிரி. அதன் பின்னர் நேற்று (வியாழக்கிழமை) அவர் கனிமொழியை சந்தித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT