Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM
பதினேழு வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட் படுத்தி குப்பைக் கிடங்கில் வீசிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் படி தமிழக டி.ஜி.பி-க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஒட்டநாகம் பட்டியைச் சேர்ந்த 17 வயது தலித் சிறுமி முல்லைக்கொடி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வேடசந்தூரில் ஃபேன்ஸி ஸ்டோர் ஒன்றில் வேலை பார்த்து வந்த முல்லைக்கொடியை வேட சந்தூரைச் சேர்ந்த பிரவீன் என் பவர் காதலித்ததாகச் சொல்லப் படுகிறது. கடந்த 1-ம் தேதி இரவு வேடசந்தூர் அருகிலுள்ள அரியபத்தம்பட்டி - மாரம்பட்டி விலக்கு ரோட்டுக்கு அழைத்துச் சென்ற பிரவீன், அங்கே அவரை கைகளை கட்டிப்போட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி இருக்கிறார். அத்துடன், தனது நண்பர்களான ஆட்டோ டிரைவர் நாட்ராயன் உள்ளிட்ட 4 பேரை அங்கு வரவைத்திருக்கிறார் பிரவீன். அவர்களும் அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைக்கொடியை வேடசந்தூர் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் வீசிவிட்டுப் போயிருக்கிறது அந்தக் கும்பல்.
தலையில் பலத்த காயத் துடன் மயங்கிக் கிடந்த சிறுமி யை அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அதிகாலை1.30 மணிக்கு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வேடசந்தூர் போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால், முல்லைக்கொடி சுய நினைவு இன்றி இருந்ததால் நடந்த சம்பவத்தை முழுமையாக தெரிந்துகொள்ள முடியவில்லை.
இந்நிலையில் 8 நாட்கள் கழித்து 10-ம் தேதி காலையில்தான் முல்லைக்கொடிக்கு சுயநினைவு வந்து, நடந்தவற்றைச் சொல்லி இருக்கிறார். இதையடுத்து, அவரது பெற்றோர் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரி வித்துள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி டி.ஜி.பி., தலைமைச் செயலாளர், திண்டுக் கல் எஸ்.பி. உள்ளிட்டவர் களுக்கும் புகார்களை அனுப்பி யுள்ளனர். எனினும் இந்த வழக்கில் 11-ம் தேதி மாலை வரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கள விசாரணை
பாதிக்கப்பட்ட சிறுமிக்காக கள விசாரணை நடத்திய மதுரை எவிடென்ஸ் அமைப்பினர், “போலீஸ் ஆவணங்களின்படி, கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 930 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சிறுமி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை அனுப்பி இருக்கிறோம்’ என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT