Published : 03 Feb 2014 12:00 AM
Last Updated : 03 Feb 2014 12:00 AM
ஒடுகத்தூர் அருகே வனப்பகுதி யில் 3 செம்மரங்களை 30 பேர் கொண்ட கும்பல் வெட்டி கடத்த முயன்றது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான செம்மரங்கள் வளர்ந்துள் ளன. சமீபகாலமாக ஆற்காடு, வாலாஜா, ஒடுகத்தூர் வனப்பகுதி யில் உள்ள செம்மரங்களை மர்ம கும்பல் அடிக்கடி வெட்டி கடத்த முயன்று வருகின்றன. செம்மரங்கள் கடத்தல் சம்பவம் அதிகரித்துள்ளதால் வனத் துறையினருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இரவு நேரத்தில் துப்பாக்கியுடன் ரோந்து செல்கின்றனர்.
ஒடுகத்தூர் அடுத்த அகரம் சமூக காடுகள் பகுதியில் சுமார் 25 ஆண்டுகள் பழமை
யான செம்மரங்கள் ஏராள மாக வளர்ந்துள்ளன. ஞாயிற்றுக் கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் காட்டில் இருந்து மரங்கள் கீழே விழும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற வனத்
துறையினர், மரங்கள் வெட்டும் கும்பல் காட்டில் பதுங்கி இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.
இதுகுறித்து வேலூர் மண்டல வன அலுவலர் ராஜாமோகனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவரது உத்தரவின்பேரில், மேலும் சில வனத்துறையினர் அங்கு பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாலை 4 மணியளவில் வனத் துறை அதிகாரிகள் குழுவினர் துப்பாக்கிகளுடன் காட்டுக்குள் தேடு தல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் துப்பாக்கி யுடன் வருவதைப் பார்த்த சுமார் 30-க்கும் மேற்பட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அவர்கள் 3 செம்மரங்களை வெட்டி, கடத்துவதற்காக தயார் நிலையில் வைத்திருப்பது தெரியவந்தது. கடத்தல் கும்பல் தப்பிய பாதை வழியாக வனத்துறை அதிகாரிகள் விரட்டிச் சென்றும் அந்த கும்பலை பிடிக்க முடியவில்லை. வெட்டப்பட்ட சுமார் 400 கிலோ எடையுள்ள செம்மரங்களை வனத்துறையினர் மீட்டனர். இது தொடர்பாக வேப்பங்குப்பம் காவல் நிலை யத்தில் வனத்துறையினர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீ ஸார் வனப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து, வனத்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘‘செம்மரங்கள் வெட்டி கடத்தப் படுவதை தடுக்க துப்பாக்கியுடன் ரோந்து செல்கிறோம்.
ஒடுகத்தூர் அருகே ரோந்து சென்றபோது அமிர்தி வனப்பகுதி வழியாக நுழைந்த கும்பல் ஒன்று 3 செம்மரங்களை வெட்டியுள்ளனர். அதை கடத்துவதற்கு முன்பாக நாங்கள் சென்று மீட்டு விட்டோம். எங்களைப் பார்த்ததும் தப்பி ஓடிய கும்பல் குறித்த சில தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT