Published : 10 Jun 2017 10:18 AM
Last Updated : 10 Jun 2017 10:18 AM

விஜயவாடா, குண்டுர், திருப்பதி வரிசையில் மதுரையில் குழந்தைகளை மகிழ்விக்கும் கலாச்சார சிற்ப பூங்கா

மதுரை மாநகராட்சியில் பயன்பா டில்லாத இரும்பு கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட கலை நயமிக்க சிற்பங்கள் தற்போது சுற்றுச்சூழல் பூங்காவில் வைக் கப்பட்டுள்ளது. அந்த பிரம்மாண்ட சிற்பங்களை கண்டு குழந்தைகள் குதூகலமடைந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் குடிநீர் லாரிகள், ஜேசிபி, ஜீப்புகள், குப்பை வண்டிகள், குப்பை அள்ளும் டிரக்குகள் உள்பட 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இவை பழுதடைந்து பயன்பாடில்லாமல் கண்டமாகும்போது மண்ணோடு குப்பையாகி மங்கி வீணாகின்றன. இந்த வாகன கழிவு களையும், பொதுமக்கள் அன் றாடம் பயன்படுத்த முடியாமல் தூக்கி வீசிய இரும்பு கழிவுகளையும் கொண்டு கலைநயமிக்க சிற்பங் களை உருவாக்கிய மாநகராட்சி நிர்வாகம், அவற்றை மாநகராட்சி எக்கோ பார்க்கில் (சுற்றுச்சூழல் பூங்கா) வைத்துள்ளனர். அதனால், இதுவரை வெறும் மரங்களும், செடி கொடிகளையும் கொண்டிருந்த சுற்றுச்சூழல் பூங்கா, இந்த கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்த சிற்பங்களை கொண் டுள்ளது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. பசுமையும், கலாச்சாரமும் இணைந்த இந்த பூங்காவில் காலையும், மாலையும் இந்த சிற்பங்களை பார்க்க குழந்தைகள் வருகை அதிகரி த்துள்ளது. இந்த சிற்பங்களில், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் மாடுபிடி வீரர், காந்தி சிலை, மீன் சிலை, சேவல் சிலை, ஆந்தை சிலை, ஒட்டகசிவிங்கி சிலை, மான் சிலை, தாய்சேய் சிலை, ரோபோ சிலை உள்ளிட்ட ஒவ்வொரு சிற்பங்களும் ஆயிரம் டன் எடை விகிதத்தில் பார்க்க பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த சிற்பங்களை தயாரிப்பதற்காகவே ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சிற்பியும், சிற்பக்கலைப் பேராசிரியருமான பி.னிவாசன் தலைமையில் சிற்பக்கலை நுட்பம் தெரிந்த வல்லுநர்கள், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மதுரை வந்தனர்.

இவர்கள் உருவாக்கிய இந்த சிற்பங்கள் தற்போது மாநராட்சி சுற்றுச்சூழல் பூங்காவை மேலும் அழகாக்கி உள்ளது. இந்த சிற்பங்கள் ஒவ்வொன்றும், தமிழகத்தின் கலாச்சாரத்தையும், குழந்தைகளின் எண்ணத்தையும் பிரதிபலிப்வையாக அமைந் துள்ளன. அதனால், சுற்றுச்சூழல் பூங்கா, தற்போது குழந்தைகள் முதல் பெரியோர் வரை எல்லோருக்குமான குதூகல பூங்காவாகிவிட்டது.

இந்த பூங்காவில் காலை 5 மணி முதல் 9 மணிவரை நடைபயிற்சிக்காக பெரியவர்கள், சிறியவர்கள் இலவசமாக அனு மதிக்கப்படுகின்றனர். மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை ரூ.5 டிக்கெட் அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் விஜயவாடா, குண்டுர், திருப்பதி உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே இதுபோன்ற சிற்ப பூங்கா நிறுவப்பட்டுள்ளன. தற்போது அதுபோன்ற பூங்கா மதுரை மாநகராட்சியிலும் வடிவமை க்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

சத்தமில்லாமல் வைக்கப்பட்ட சிற்பங்கள்

திருநெல்வேலி ஆட்சியராக மாறுதலாகி சென்ற மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரியின் எண்ணத்தில் உதித்த திட்டம்தான், கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த சிற்பங்கள். இந்த சிற்பங்களை, சுற்றுச்சூழல் பூங்காவில் வைத்து அவற்றை வெளியுலகிற்கு தெரியப்படுத்த விழாவை நடத்த அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதற்குள் அவர் இடமாறுதலாகி சென்றுவிட்டதால் அவரது எண்ணத்தில் உதித்த இந்த சிற்பங்கள் மதுரை சுற்றுச்சூழல் பூங்காவில் சத்தமில்லாமல் வைத்து செயல்படத் தொடங்கியுள்ளது. அதுபோல், சந்தீப் நந்தூரியின் எண்ணத்தில் உதித்த மற்றொரு திட்டமான தாமரைத்தொட்டி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பூங்காவும் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது. சிற்பங்கள் சுற்றுச்சூழல் பூங்காவில் சத்தமில்லாமல் வைக்கப்பட்டதுபோல், இந்த மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பூங்காவும் சத்தமில்லாமல் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x