Published : 22 Jun 2016 08:43 AM
Last Updated : 22 Jun 2016 08:43 AM

காலாவதியான பிறகும் இயக்கப்படும் அரசு பஸ்கள்: பிஹார் முதலிடம், தமிழகத்துக்கு 2-ம் இடம் - மத்திய அரசு அறிக்கையில் தகவல்

காலம் கடந்து காலாவதியான பிறகும்இயக்கப்படும் மாநில அரசு பஸ்கள் பட்டியலில் பிஹார் முதலிடத்திலும், தமிழகம் 2-ம் இடத்திலும் உள்ளன. மற்ற மாநகரங்களைக் காட்டிலும் சென்னையில்தான் அதிகபட்சமாக 56.9 சதவீத பஸ்கள் காலம் கடந்து இயக்கப்படுவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2014-15-ம் ஆண்டில் நாட்டின் பொது போக்குவரத்து செயல்பாடுகள் தொடர்பான அறிக் கையை மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. அதில், கூறியிருப் பதாவது:

மாநிலங்களின் போக்குவரத்துக் கழகங்களின் மொத்த வருவாய் ரூ.51,033 கோடியாகும். ஆனால், செலவினம் ரூ.61,843 கோடியாகும். இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பயணிகளின் எண்ணிக்கை 2.22 சதவீதம் அதிக ரித்துள்ளது. அதுபோல், போக்கு வரத்துக் கழகங்களின் வருவாய் இழப்பு 6.1 சதவீதம் அதிகரித் துள்ளது. ஊழியர்களின் எண் ணிக்கை 1.7 சதவீதம் குறைந் துள்ளது. ஒட்டுமொத்த அரசு பஸ்களின் விபத்து எண்ணிக்கை 19,378-ல் இருந்து 18,249 ஆக குறைந்துள்ளது. உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்து எண்ணிக்கை 5.8 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஒரு பஸ்ஸை 6 லட்சம் கி.மீ. வரை ஓட்டலாம் அல்லது 7 ஆண்டுகள் வரையில் பயன் படுத்தலாம். அதன் பிறகு அந்த பஸ்ஸை பயன்படுத்தினால் காலாவதியான பஸ் ஆக மாறிவிடுகிறது. காலம் கடந்து பஸ்ஸை பயன்படுத்துவதால் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும். பிரேக் பிடிப்பதில் சிரமம் ஏற்படும். இன்ஜின் கோளாறாகும், மேற்கூரை பழுதாகும். இதுபோன்ற இடர்பாடுகளால் சாலையில் விபத் துகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

நாட்டின் மற்ற மாநில அரசுக ளின் பஸ்களை விட, பிஹாரில் தான் காலம் கடந்த பஸ்கள் அதிக அளவில் (80 சதவீதம்) இயக்கப்படுகின்றன. இதற்கு, அடுத்தடுத்த இடங்களில் வடக்கு பெங்கால் மண்டல போக்குவரத்துக் கழகமும் (63 சதவீதம்), சேலம் போக்குவரத்துக் கழகமும் (63 சதவீதம்), தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் (56 சதவீதம்) இடம் பெற்றுள்ளன.

காலம் கடந்த 56.9% பஸ்கள்

அனைத்து மாநகரங்களில் இயக்கப்படும் பஸ்களில், சென்னை மாநகரத்தில் இயக்கப்படும் பஸ்களில் 56.9 சதவீத பஸ்கள் காலம் கடந்து இயக்கப்படுகின்றன. இதற்கு அடுத்ததாக சண்டீகரில் 52 சதவீத பஸ்கள் காலம் கடந்து இயக்கப்படுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகத்தில்தான் காலம் கடந்த பஸ்கள் இல்லாமல் உள்ளது.

கூட்ட நெரிசல்…

இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒரு மாநகர பஸ்ஸில் பயணம் செய்வோரின் பட்டியலும் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆமதாபாத் மாநகர பஸ் ஒன்றில் ஒரு நாளைக்கு 586 பேரும், டெல்லியில் 781 பேரும், பெங்களூரில் 788 பேரும் பயணிக்கின்றனர். ஆனால், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மட்டும்தான் ஒரு நாளைக்கு 1,311 பேர் பயணம் செய்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x