Published : 30 Apr 2017 08:57 AM
Last Updated : 30 Apr 2017 08:57 AM
தமிழகத்தில் நாளை மே 1- தொழி லாளர் தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. பல்வேறு கிராமங்களில் இளைஞர்கள் முழு வீச்சில் கலந்துகொண்டு மதுக் கடை அகற்றம், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம், மீத்தேன் திட்டம் எதிர்ப்பு உள்ளிட்ட தங்கள் கிராமம் சார்ந்த பிரச்சினைகளை தீர்மானமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர்.
கிராம சபைக் கூட்டங்கள் குறித்து அரசு போதிய விளம்பரம் செய்யாததால் கூட்டங்கள் நடப்பதே மக்களுக்குத் தெரிவ தில்லை. தமிழகத்தில் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்கள் கட்டாயமாக கிராம சபைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அரசு உத்தர விட்டுள்ளது. அதன்படி, நாளை மே 1- தொழி லாளர் தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடை பெறும்.
இந்த முறை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லை என்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் கிராமப் பஞ்சாயத்தின் செயலர்கள் கிராம சபைக் கூட்டத்தை முன்னின்று நடத்துவர். முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர்கள், ஊர் பெரியவர்கள், ஊர் பிரச்சினைகளை முன்னின்று எடுத்துச் செல்லும் இளைஞர்கள் யாரேனும் தலைமை ஏற்கலாம். பெரும்பாலும் காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டம், பஞ்சாயத்து அலுவலகம், ஊர் பொது இடம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் நடக்கும்.
நாளை நடக்கவிருக்கும் கிராம சபைக் கூட்டங்களுக்கான முன்னேற்பாடு பணிகளுக்காக பல்வேறு ஊராட்சிகளுக்கு சென்று பணியாற்றி வரும் தன்னார்வலர் நந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கிராம சபைக் கூட்டத்துக்கு மக்கள் கட்டாயம் சென்று தங்கள் கிராம பிரச்சினைகளை பேசி, தீர் மானமாக நிறைவேற்ற வேண்டும்.
500 பேர் மக்கள் தொகை கொண்ட கிராமப் பஞ்சாயத்து எனில் தீர்மானத்தை நிறைவேற்ற 50 பேரின் கையெழுத்து தேவை. 501 முதல் 3000 பேர் வரை இருந்தால் 100 பேரின் கையெழுத்தும், 3001 முதல் 10,000 பேர் வரை 200 பேரின் கையெழுத்தும், 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பஞ்சாயத்து எனில் 300 பேரின் கையெழுத்தும் தேவை. தீர்மானம் தவிர அரசு செய்த வரவு - செலவு கணக்குகளை மக்கள் பார்வையிட வேண்டும். கேள்விகள் கேட்க வேண்டும். அப்போதுதான் கிராமத்துக்கான புதிய திட்டங் களை கேட்டுப் பெற முடியும்.
ஏராளமான கிராமப் பஞ்சாயத் துகளில் இளைஞர்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஆலத்தூர் கிராமப் பஞ்சாயத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பு திட்டங்களுக்கு கிராம சபை தீர்மானம் நிறைவேற்ற இருக் கின்றனர். திருவாரூர் மாவட் டம், எடக்கீழையூர் பஞ்சாயத் தில் மீத்தேன் திட்டத்தை செயல் படுத்துவதை எதிர்த்தும் அந்த கிராமத்தில் பள்ளிக்கு அருகில் செயல்படும் மதுக்கடையை அகற்றவும் தீர்மானம் நிறை வேற்றப்படவுள்ளது.
பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம், வாவிபாளையத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குள் வந்த மதுக்கடை, கிராம சபை தீர்மானம் மூலம் அகற்றப்பட்டது. தற்போது நெடுஞ் சாலையில் மதுக்கடைகள் மூடப் பட்ட நிலையில் ஊருக்குள் மீண்டும் மதுக்கடையை திறக்க முயற்சி நடக்கிறது. இதை தடுக்க அங்கு தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். கோவை, மதுக்கரை ஒன்றியம் , மலுமிச்சாம்பட்டி கிராம சபையில் அங்குள்ள மதுக்கடையை அகற்ற தீர்மானம் நிறைவேற உள்ளது.
நெடுவாசல் கிராமத்தில் கடந்த மாதம் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாளைய கூட்டத்திலும் அதேபோன்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. விருதுநகர் மாவட்டம், வெம் பக்கோட்டை ஒன்றியம், வெற் றிலை ஊரணி கிராமப் பஞ்சாயத் தில் புதுக்கண்மாய் ஏரி ஆக்கிர மிப்புகளை அகற்றவும், கரூர், தாந்தோணி பேரூராட்சி, பாக நத்தம் ஊராட்சியில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், கும்பகோணம் அருகே திருக்கடையூர் கிராமப் பஞ்சாயத்தில் நீர் நிலை களை மேம்படுத்தவும் விவசாயி களின் பிரச்சினைகளை தீர்க்க கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்படுகின்றன.
இத்தகவல்களை ஆர்வத்துடன் கூறிய நந்தகுமார், கிராம பஞ் சாயத்துக்கள் பற்றி நம்பிக்கை ஊட்டுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT