Last Updated : 26 Feb, 2017 09:20 AM

 

Published : 26 Feb 2017 09:20 AM
Last Updated : 26 Feb 2017 09:20 AM

செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள கல்குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீர் குடிநீராக சென்னை வருகிறது

செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள 2 கல் குவாரிகளில் தேங்கி யுள்ள மழைநீர் சுத்திகரிக்கப்பட்டு விரைவில் சென்னை குடிநீர் தேவைக்காக அனுப்பப்பட உள்ளது.

சென்னையின் குடிநீர் தேவையை போக்க பல்வேறு நீர் ஆதாரங்கள் மூலம் தண்ணீரைப் பெறுவதற்கு பொதுப்பணித் துறையும், சென்னைக் குடிநீர் வாரியமும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகள், கடல்நீரைக் குடிநீராக்கும் யூனிட்டுகள், திரு வள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயக் கிணறுகள், ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீர் ஆகியவற்றின் மூலம் சென்னை மாநகர மக்க ளின் குடிநீர் தேவை சமாளிக்கப் படுகிறது. கடந்த 140 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு மழை குறைவாக இருந்ததால் குடிநீர் நீர் ஆதாரங்களில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் கோடையை சமாளிக்க புறநகர் கல்குவாரிகளில் தேங்கியுள்ள மழை நீரை குடிநீராகப் பயன்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக 31 கல்குவாரிகள் கண்டறியப்பட்டுள் ளன. அவற்றில் தேங்கியிருக்கும் நீரின் தரத்தை கிண்டி கிங் இன்ஸ்ட்டி டியூட், அண்ணா பல்கலை. சுற்றுச் சூழல், புவி அமைப்பியல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மெட்ரோ ரயிலுக் காக எடுக்கப்படும் மண் கல்குவாரிகளில் கொட்டப்படுவ தால் பல குவாரிகளில் தற்போது தண்ணீர் இல்லை. இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மெட்ரோ ரயிலுக்கு தோண்டும் மண்ணை கல்குவாரிகளில் கொண்டு சென்று கொட்டுவதால் பல்வேறு குவாரிகளில் தண்ணீர் இல்லை. கொள்ளச்சேரி, சிக்கராயபுரம் கிராமங்களில் உள்ள 2 கல் குவாரிகளில் மட்டும் தண்ணீர் உள்ளது.

செம்பரம்பாக்கம் அருகே இந்த குவாரிகள் அமைந்தி ருப்பதால் நிலத்தடி நீர் காரணமாக ஊற்றுநீர் தேங்கியுள்ளது. எனவே, நிலத்தடி நீர் மட்டம் குறையும் வரை இங்கிருந்து தண்ணீர் எடுக்க முடியும் என்பதால் இக்குவாரி யில் தேங்கியுள்ள நீரின் தரம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசுபட்டிருக்கவில்லை என்றும் மண் துகள்கள் மட்டுமே இருப்பதால் சுத்திகரித்து பயன் படுத்த முடியும் என்றும் கண்டறி யப்பட்டுள்ளது. எனவே, இந்த குவாரிகளில் இருந்து தண்ணீரைப் பம்ப் செய்து குழாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக் கரையில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலை யத்துக்கு கொண்டு போய் சுத்திகரித்து சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்பப்பட உள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இரண்டு கல்குவாரிகளில் இருந்து தினமும் 50 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். அதாவது 5 கோடி லிட்டர் கிடைக் கும் என்றும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரியாக இருந்தால் 5 ஆயிரம் லாரி தண்ணீர் கிடைக்கும் என்றும் மதிப் பிடப்பட்டுள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x