Published : 23 Feb 2014 11:30 AM
Last Updated : 23 Feb 2014 11:30 AM
ஐ.டி. நிறுவனங்களின் வளர்ச்சிக்காக சேவை செய்து வரும் நாஸ்காம் அமைப்பின் மண்டல இயக்குநர் கே.புருஷோத்தமன் கூறியதாவது:
தமிழகத்தில் ஐ.டி.துறையில் 4 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பெண் கள். இளம் பெண்கள் அதிகம் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் ஐ.டி.துறையில் ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் கோடியை பயிற்சிக்காக செலவு செய்கின்றனர். ஐ.டி.துறையில் பணியாற்றுபவர்களில் மனநிலை பிரச்சினைகளை தீர்க்க, மனநல ஆலோசகர்கள் நிறுவனத் திற்கு வருகிறார்கள். அவர்க ளுடைய பிரச்சினையை அறிந்து தீர்த்து வைக்கிறார். பணியாளர் களை பாதுகாப்பாக கார்களில் அழைத்து சென்று வீடுகளில் விட வேண்டும். கடைசியாக இறங்குவது பெண் பயணியாக இருந்தால், அவரது பாதுகாப்புக்கு ஒரு செக்யூரிட்டி இருக்க வேண்டும். செக்யூரிட்டி மற்றும் டிரைவர் களின் பின்னணி தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. இதனை அனைத்து ஐ.டி.நிறுவனங்களும் முழுமையாக கடைபிடிக்கின்றன. எங்கோ ஒரு நிறுவனத்தில் பிரச்சினை நடப்பதால், ஐ.டி.துறையை தவறாக சொல்வது சரியல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கீழ்பாக்கம் மனநல மருத்துவ மனை முன்னாள் இயக்குநர் டாக்டர் சத்தியநாராயணன் கூறியதாவது:
ஐ.டி.துறையில் பணிபுரியும் பெண்களுக்கு குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டும் என்ற பணிச்சுமை அதிகமாக உள்ளது. இதனால், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், நிறுவனத்தில் மட்டுமின்றி வீடுகளுக்கு வந்த பிறகு லேப்டாப்பில் பணியை தொடர்கின்றனர். இதனால், வீட்டிலும் பெண்கள் பிரச்சினையை சந்திக்க நேரிடுகிறது. மேலும் அலுவலகத்தில் பதவி உயர்வு தருகிறேன். சம்பளத்தை உயர்த்தி தருகிறேன் என கூறி உயர் அதிகாரியின் பாலியல் தொந்தரவுக்கு பெண்கள் ஆளாவதும் சில சமயங்களில் பிரச்சினைக்குக் காரணமாகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT