Published : 20 Feb 2014 12:00 AM
Last Updated : 20 Feb 2014 12:00 AM

முதல்வரை தெய்வமாக பார்க்கிறேன்: முருகனின் தாய் பேட்டி

‘தமிழக சட்டமன்றத்தில் 7 பேரை விடுதலை செய்வதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவை தெய்வமாக பார்க்கிறேன்’ என முருகனின் தாய் சோமணி தெரிவித்தார். இது தொடர்பாக ‘தி இந்து’விடம் முருகனின் தாய் சோமணி அளித்த பேட்டி:

‘‘இது மகிழ்ச்சியான தருணம். தமிழக முதல்வரும் ஒரு பெண் தானே. ஒரு தாய்க்கு தாயாக இருக்கிறார். அவர் படித்தும், பார்த்தும் இருப்பார். அவருக்கு அந்த உணர்வு இல்லாமல் இல்லை. அவருக்கு பண்பு இருக்கிறது. தமிழக முதல்வரை தெய்வமாகத்தான் பார்க்கிறேன்.

தேன் கொம்பை நக்கியவன் அகப்பட்டுக்கொண்டான். அதுபோலத்தான் எங்கள் பிள்ளை கள் மாட்டிக்கொண்டார்கள்.

எங்கள் பிள்ளைகள் இனி காப்பாற்றப்பட மாட்டார்களா? என எண்ணியிருந்தோம். தமிழக பொதுஜனங்கள், உணர்வாளர்கள் சேர்ந்து கை தூக்கி விட்டார்கள்.

இலங்கையில் சாந்தனின் அம்மாவை சந்தித்தேன். அவர் களை பார்க்கவே கஷ்டமாக இருக் கிறது. வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ யாரும் இல்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வம்தான் துணை. அவர்கள் சோறுகூட சாப்பிடுவதில்லை. உங்கள் பிள்ளைக்கு ஒன்றும் ஆகாது. தைரியமாக இருங்கள் என ஆறுதலாக பேசிட்டுவந்தேன்.

நாங்கள் இலங்கையில் யாழ் பாணம், கண்டி, வவுனியா, கொழும்பு என எங்கும் இருக்க முடியாது. இந்தியாவுக்கு வந்தால் தங்க முடியாது.

மாதக்கணக்கில் என் பிள்ளை களுடன் எங்கு எங்கெல்லாம் இருந்தேன் என சொல்ல முடியாது. அதை நினைத்தால் இப்போதுகூட நடுங்குகிறது. கோயிலுக்குச் சென்றால் என் பிள்ளைகளின் நட்சத்திரத்தை அர்ச்சனைக்கு சொல்லவேண்டியதில்லை. பூசாரியே சொல்லிவிடுவார்.

எவ்வளவு துன்பம். கொடுமையானது. தனித்தன்மை யுடன் அந்த பிள்ளை வளர்கிறது. நான் எந்த நேரமும் இறைவனை மன்றாடிக்கொண்டிருக்கிறேன். செய்யாத குற்றத்துக்கு குற்றவாளியாக்கப்்பட்டிருக் கிறார்கள். முதல்வர் அம்மாவை நேரடியாக சந்தித்து, என் பிரச்சினை, சூழ்நிலையை சொல்லப்போகிறேன். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என வழக்கறிஞர் புகழேந்தியிடம் சொல்லிவிட்டு வந்தேன். அதன் பிறகு முதல்வர் என்ன முடிவு எடுக்கிறாரோ? எடுக்கட்டும். அதை விதி என நினைத்துக்கொள்கிறேன் என்றேன். என் பிள்ளைகள் வெளிநாட்டில் சந்தோஷமாக இருக்கிறார்கள் என சிலர் நேருக்கு நேராக சொன்னார்கள். மனது சங்கடப் பட்டது. ஆனால், சிறையில் இருக்கும் என் பிள்ளையை பற்றி யாரும் நினைக்கவில்லையே என கஷ்டம் இருந்தது. எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி சொல்லாமல் நளினி-முருகன் இங்கிருந்து கிளம்ப மாட்டார்கள். விடுதலை செய்துவிட்டார்கள் என அவர்கள் தப்பி ஓடிவிடமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் இருப்பதா? அல்லது மகளுடன் இருப்பதா என்ற கேள்வி இருக்கிறது.

இந்தியாவில் இருக்க ஹரித்ரா விரும்பவில்லை. தாய் தந்தை உயிரோடு இருந்தும் இந்தியா வர அவர் விரும்பவில்லை. தான் ஒரு சின்னப்பிள்ளை, அறியாத பிள்ளை, தன்னுடைய வருங்காலத்தைக்கூட இந்தியா, இலங்கை நாடுகள் எண்ணிப் பார்க்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. அப்பாவும் அம்மாவும் உயிரோடு இருந்தும் இல்லாததுபோல தவிக்கிறார்.

இலங்கையில் எங்கள் நிலங்களை சிலர் பறிக்கிறார்கள். எதிர்காலத்தில் என் பேத்தி இலங்கைக்குச் சென்று நோய் வாய்ப்பட்டவர்களுக்கு பணி விடை செய்ய விரும்பினால் இடம் வேண்டும். இதற்காக அதிகாரிகளிடம் சண்டை போட்டுவிட்டு வந்திருக்கிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x