Published : 06 Feb 2017 10:12 AM
Last Updated : 06 Feb 2017 10:12 AM
கால்கள் செயல்படாத மாற்றுத் திறனாளிகள் ஸ்கூட்டர் தொழில் நுட்பத்துடன் கைகளால் ஓட்டக் கூடிய காரை (ஹேண்ட்கண்ட்ரோல் கார்) மதுரை இளைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார். இந்த காருக்கு மாற்றுத்திறனாளிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சொந்தமாக கார் வாங்கி ஓட்டு வது பலரது கனவாக இருக் கும். ஆனால், மாற்றுத்திறனாளி களுக்கு அது கனவாக மட்டும் இன்றி சவாலாகவும் உள்ளது. சாதாரண கார்களில் பிரேக் அழுத்து வது, கிளெட்ச், ஆக்சிலேட்டர் ஆகியவற்றை கால்களால் இயக்க வேண்டும். ஒரு சில பெரிய நிறு வனங்கள் மட்டும் ஆட்டோமேட்டிக் கியர், கிளெட்ச் வசதிகளுடன், பிரேக், ஆக்சிலேட்டர்களை மட்டும் காலால் இயக்கும் வகையில் கார்களை வடிவமைத்துள்ளன.
ஆனால், மாற்றுத்தினாளிகள் கார்களை இயக்குவதற்கு அவர் களது உடல் குறைபாடு பெரும் தடையாக இருக்கிறது. எனவே இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளிகளுக்காக இது வரை கார்கள் தயாரிக்கப்பட்ட வில்லை.
தற்போது அவர்களுக்காக பிரேக், ஆக்சிலேட்டரை கைகளா லேயே இயக்கும் தொழில்நுட் பத்துடன் கூடிய காரை (ஹேண்ட் கண்ட்ரோல் கார்) மதுரை மெக் கானிக் பவுல்ராஜ் வடிவமைத்துள் ளார். இந்த காரை மாற்றுத்திற னாளிகள் ஸ்கூட்டர் ஓட்டுவதுபோல் எளிதாக ஓட்டிச் செல்லலாம்.
இதுகுறித்து மதுரை தபால் தந்தி நகரைச் சேர்ந்த பவுல்ராஜ் கூறியதாவது:
இரண்டு கால்களும் செயல் படாத எனது நண்பர் ஒருவர் காரின் அனைத்து இயக்கங்களையும் கைகளால் செயல்படுத்தும் வகை யில் வடிவமைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். அவருக் காகவே இத்தொழில்நுட்பத்தை உருவாக்கி காரை வடிவமைத்தேன். கைகளால் இயக்கக்கூடிய இந்த தொழில்நுட்பத்தில் மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர் என 2 வகை உண்டு.
மேனுவல் தொழில்நுட்பத்தில் ஆக்சிலேட்டர், கிளெட்ச், கியர், பிரேக் உள்ளிட்டவற்றை ஒரே கையைப் பயன்படுத்தியே இயக்க முடியும். அதனால், கை வலி, வீக்கம் ஏற்படும். நாளடைவில் கை பலவீனமடையவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால், ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பத்தில் பிரேக்கை அழுத்தி ஒருமுறை கியர் போட்டால் போதும். அதன்பிறகு பிரேக், ஆக்சிலேட்டரை கையாலேயே இயக்கலாம். விருப்பப்பட்டால் பிரேக், ஆக்சிலேட்டரை காலாலும் இயக்கிக் கொள்ளலாம்.
நான் வடிவமைத்த இந்த காரை பயன்படுத்தி எனது மாற்றுத் திறனாளி நண்பர் கேரளா வரை சென்று வந்தார். அவருக்கு இது வரை எந்தப் பிரச்சினையும் ஏற்பட வில்லை. முதியோர்களும் இந்த காரை பயன்படுத்தலாம். நான் உரு வாக்கிய இந்த தொழில்நுட்பத்தை முறையாகப் பதிவு செய்து, மாற் றுத்திறனாளிகளின் கார்களில் வடிவமைத்துக் கொடுக்க உரிமம் வாங்க உள்ளேன் என்றார்.
விருப்பத்துக்கேற்ப வடிவமைக்கலாமா?
மதுரை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே. பாஸ்கரன் கூறியதாவது:
ஆட்டோமேட்டிக் கியர், கிளெட்ச் வசதிகளுடன் ஆக்சிலேட்டர், பிரேக் ஆகியவற்றை மட்டும் ஒரு காலைக்கொண்டு இயக்கக்கூடிய கார்களை சில நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்காகவே தயாரித்துள்ளன. இக்கார்களை மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி அனைவரும் தற்போது விரும்பி வருகின்றனர்.
இரண்டு கால்களும் இழந்த அல்லது செயல்படாத மாற்றுத்திறனாளிகள் விரும்பும் வகையில் கார்களை வடிவமைக்க தமிழகத்தில் சென்னை, கோவை ஆகிய இடங்களில் வாகன வடிவமைப்பு மாற்றும் பணிமனைகள் (ஆல்ட்ரேசன் சென்டர்கள்) உள்ளன. இவர்கள் புனேயில் உள்ள ஆட்டோமொபைல் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இண்டியா அமைப்பில் அனுமதி பெற்றவர்கள்.
மாற்றுத்திறனாளிகள், முதலில் இந்த பணிமனைகளில் தாங்கள் எந்த வகையான மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான மருத்துவச் சான்றிதழுடன், விரும்பும் வடிவமைப்பைக் கேட்டால் அவர்களுக்குத் தேவையான வகையில் செய்து கொடுப்பார்கள். அந்த வடிவமைப்பை ஆர்சி புத்தகத்தில் பதிவு செய்து, அதற்கான லைசன்ஸ் பெற்ற பிறகே அந்த காரை சாலையில் இயக்க முடியும்.
மற்ற இடங்களில் வடிவமைத்துக் கொடுக்கும் காரை இயக்குவது மாற்றுத்திறனாளிகள் திறமை. அரசு அதை அதிகாரப்பூர்வமாக அனுமதிக்காது. அவர்களுக்கு லைசென்ஸும் வழங்காது. இவர்கள் காரை இயக்கி அவருக்கோ, பொதுமக்களுக்கோ விபத்து ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT