Published : 05 Jul 2016 08:04 AM
Last Updated : 05 Jul 2016 08:04 AM
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற திருச்சி சிவா எம்.பி.யின் கோரிக்கைக்கு கடிதம் மூலம் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, எந்த இலக்கிய நூலையும் தேசிய நூலாக அறிவிக்கும் திட்டமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகப் பொதுமறையாக போற் றப்படும் திருக்குறளை இந்தியா வின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 13.4.2005 அன்று அப் போதைய முதல்வர் ஜெயலலி தாவால் கொண்டு வரப்பட்ட, திருக் குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்ற தீர் மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதேபோல திமுக, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், கவிஞர்கள் இக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 9.12.2014ம் தேதி மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசும்போது, “சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் புலவர் திருவள் ளுவரால் திருக்குறள் இயற்றப் பட்டது. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத கருத்துகளை எடுத்துரைக்கும் வகையில் இந் நூல் விளங்குகிறது.
1730-ம் ஆண்டில் லத்தீன் மொழியிலும், 1886-ல் ஆங்கிலத் திலும் திருக்குறள் மொழிபெயர்க் கப்பட் டது. அதன் பிறகு பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பெரும்பாலான மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப் பட்டதில் இருந்து, இதன் தனிச் சிறப்பை உணரலாம். மதசார்பின்மை நிலையுடன் மொழி, மத, பிராந்திய எல்லை களைக் கடந்து விளங்கும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு பதிலளித்து, மத்திய சுற்றுலா- கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா அண்மையில் திருச்சி சிவா எம்.பி.க்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “எந்த இலக்கிய நூலையும் தேசிய நூலாக அறிவிக்க, மத்திய கலாச்சாரத் துறையிடம் கொள்கை அளவி லான வரையறை எதுவும் இல்லை. இருந்தாலும் திருக் குறளின் முக்கியத்துவம், அதனுடைய தத்துவத்தை கருத்தில் கொண்டு கலாச்சார அமைச்சகத்தில், தன்னாட்சி அதி காரத்துடன் செயல்படும் சாகித்ய அகாடமி அமைப்பு மூலம், திருக் குறள் மற்றும் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு குறித்து தனி நூல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆங்கிலம், இந்தி, சிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி, உருது ஆகிய மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்ப்பு செய்து நூல்கள் வெளியிட்டுள் ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கும் திட்டம், மத்திய அரசிடம் தற்போதைக்கு இல்லை என்பது வெளிப்பட்டு விட்டதாக திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள் ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT