Published : 27 May 2017 10:26 AM
Last Updated : 27 May 2017 10:26 AM
மதுரை - தேனி தேசிய நெடுஞ் சாலையில் சுங்கவரி வசூல் செய்யப்பட மாட்டாது என தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் வி.வயிரப்பன் தெரிவி த்துள்ளார்.
இந்த அறிவிப்பு 50-க்கும் மேற்பட்ட கிராமத் தினரை மகிழ்ச்சி அடையச் செய்து ள்ளது.
மதுரையில் இருந்து தேனி வரை 77 கி.மீ. தூரத்துக்கு நான்குவழிச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இப்பகுதியினர் சாலை விரிவாக்கப்பணி மட் டுமே நடப்பதாகக் கருதினர். ஆனால் நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டதும், இதற்கு மதுரை அருகே செக்கானூரணி, தேனி அருகே குன்னூரில் டோல் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டதும் பின்னர் தெரிந்தது. இதற்காக சுங்க வசூல் அலுவலகங்கள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டன. ஒரு வாரத்துக்குள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற தகவல் 3 மாதங்களுக்கு முன் வெளியானது. இதற்கு இப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒ.எஸ். ராமச்சந்திர பிரதீப் இச்சா லையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டி டோல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மதுரை, தேனி ஆட்சி யர்களுக்கு கடிதம் அளித்தார். அதில் உசிலம்பட்டி, ஆண்டிப் பட்டியைச் சுற்றி புறவழிச் சாலை அமைக்காதது, 2 இடங்களில் ரயில் பாதையைக் கடக்க மேம்பாலம் அமைக்காதது, குறைந்தபட்சம் 42 மீட்டர் அகலம் இல்லாதது, விதிகளுக்கு மாறாக அதிக வளைவுகள், பல இடங்களில் சாலைகள் இணைக்கப்படாதது என பல்வேறு குறைகளுடன் இப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், டோல் கட்டணம் வசூலிக்கும் தகுதி இந்த சாலைக்கு இல்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனு குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகா ரிகளிடம் தேனி ஆட்சியர் வெங்க டாச்சலம் விசாரணை நடத்தினார். உயர் நீதிமன்ற கிளையிலும் ராமச்சந்திர பிரதீப் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் மதுரை - தேனி சாலையில் டோல் கட்டணம் வசூலிக்கப்படாது என மதுரை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் தெரிவித்து ள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள உத்தரவு: மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அமைத்து வரும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங் கச்சாவடி மதிப்பீட்டுத் தொகை ரூ. 100 கோடிக்கும் குறைவாக இருக்கக்கூடாது என் றும், அப்படி குறைவாக உள்ள சுங்கச்சாவடிகளை விலக்கிக் கொள்ள கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மதுரை-தேனி சாலை ரூ.100 கோடிக்கும் குறைவானது என்பதால், இந்த சாலையில் சுங்கச்சாவடி செயல்படாது. அங்கு சுங்க வரி ஏதும் வசூல் செய்யப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளார். இது இப்பகுதியைச் சேர்ந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராமச்சந்திர பிரதீ்ப் கூறுகையில், எந்த தகுதியும் இல்லாத நான்கு வழிச்சாலைக்கு வரி வசூலிக்க முயன்றதை தடுத்துள்ளோம். ஆனால், இதற்கு முன்னதாகவே இப்பகுதியில் இயங்கும் தனியார் பேருந்துகள் சுங்க வரியைக் கூறி கட்டணத்தை உயர்த்திவிட்டன. உசிலம்பட்டிக்கு ரூ.16 ஆக இருந்த கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டு விட்டது. இதை உடனே குறைக்க வேண்டும். மேலும், அமைக் கப்பட்ட சுங்கச்சாவடிகளை உடனே அகற்ற வேண்டும். விதி களே இல்லாதபோது, இங்கு சுங்கச்சாவடி அமைக்க அனுமதி அளித்தது யார் என்பதும் மக் களுக்கு தெரிய வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT