Published : 22 Mar 2014 01:28 PM
Last Updated : 22 Mar 2014 01:28 PM
தாய் வி.எச்.எஸ். மற்றும் தமிழ்நாடு புக் ஆப் ரெகார்ட்ஸ் இணைந்து திருநங்கைகளின் 60 மணி நேர தொடர் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. உலக சாதனை முயற்சிக்கான இந்நிகழ்ச்சியை சென்னையில் தாய் வி.எச்.எஸ் அமைப்பின் இயக்குநர் ஜோசப் வில்லியம்ஸ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த தணிகாசலம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களிலிருந்து 140 திருநங்கைகள் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கரகாட்டம், பறையாட்டம், பட்டிமன்றம், கருத்தரங்கம், இசை நிகழ்ச்சி, தெருக் கூத்து, நாட்டிய நாடகம், ஒடிசாவின் கோராபுட் பழங்குடி நடனம், மகாராஷ்ட்ராவின் பதாய் நடனம் உள்ளிட்ட 26 கலைநிகழ்ச்சிகள் இதில் இடம் பெறுகின்றன.
காலையில் தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராய அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவில் தி.நகர் காமாகுபுரத்தில் தெருக் கூத்து நடனம் நடக்கிறது. வெள்ளிக்கிழமை காலை 10.15 மணி தொடங்கிய சாதனை முயற்சி, ஞாயிற்றுக்கிழமை இரவு 10.15 வரை நடக்கும்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பா ளர் சுதா கூறுகையில், “உலகி லேயே திருநங்கைகள் இப்படி யொரு சாதனை முயற்சியை எடுத்ததே இல்லை. நாங்கள் முன்னுதாரணமாக இருந்து இதை ஒருங்கிணைத்துள்ளோம். எங்களது சாதனையை பின்வரும் தலைமுறையினர் முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT