Published : 29 Mar 2014 10:46 AM
Last Updated : 29 Mar 2014 10:46 AM
குடிநீர் வரியை வரும் 31ம் தேதிக்குள் செலுத்துமாறு சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சேவையை பயன்படுத்திவரும் பொது மக்கள் 2013-14 இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர் வரியை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கடைசி நேர நெரிசலை தவிர்க்க அரசு விடுமுறை தினங்களான மார்ச் 30, 31-ம் தேதிகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும். எனவே, பொதுமக்கள் அபராத தொகைக்கு ஆளாகாமல் வரும் 31-ம் தேதிக்குள் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்ற வரியை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT