Published : 27 Oct 2015 10:13 AM
Last Updated : 27 Oct 2015 10:13 AM
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு கூடுதலாக ஆண்மையை நீக்கம் செய்யும் தண்டனை வழங்குவது தொடர்பாக சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், வள்ளி யூரில் செயல்பட்டுவந்த காப்பகம் ஒன்றில் தங்கி 9-ம் வகுப்பு பயின்ற 15 வயது சிறுவனை டெல்லி உட்பட பல்வேறு வட மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று தகாத உறவுகொண்டு துன்புறுத்தியதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராபின்சன் என்பவர் மீது வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய் தனர்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ராபின்சன் ஆஜராகாமல் இருந்த தால், அவருக்கு எதிராக வள்ளி யூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப் பித்தது. இதையடுத்து ராபின்சனை தேடப்படும் நபராக சர்வதேச போலீஸ் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் தன் மீதான வழக் கையும், தன்னைத் தேடப்படும் நபராக சர்வதேச போலீஸார் வெளியிட்ட அறிவிப்பையும் ரத்து செய்யக்கோரி ராபின்சன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
குழந்தைகளுக்கு எதிரான பாலி யல் குற்றங்களைத் தடுப்பதற்கு 2012-ல் நிறைவேற்றப்பட்ட போக்ஸோ சட்டம் உட்பட பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன. இருப்பினும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையவில்லை. 2012-ம் ஆண் டில் 8,172, 2013-ல் 58,224, 2014-ம் ஆண்டில் 89,423 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கு எதி ரான பாலியல் குற்றங்கள் அதிக ரித்து வருவதைக் காட்டுகிறது.
இந்தியாவில் பல்வேறு பகுதி களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடை பெறும்போது, தற்போதுள்ள சட் டங்களால் பயனில்லை, இப்பிரச் சினையை தீர்க்க முடியாத நிலை ஏற்படும்போது நீதிமன்றம் கைகளைக் கட்டிக்கொண்டு நடை பெறும் சம்பவங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவ்வாறு இருப்பது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அநீதி இழைப்பதுடன், இந்த நீதிமன்றம் எடுத்துக்கொண்ட சத்தியபிரமாணத்தை மீறுவது போலாகும்.
இதனால் குழந்தைகளிடம் தவறாக நடப்போருக்கு குறிப்பாக குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு கூடுதலாக ஆண்மையை நீக்கும் தண்டனையும் வழங்க வேண்டும். குற்றங்களில் தொடர்புடையவரின் ஆண்மைத் தன்மையை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும். இது தொடர்பாக சட்டம் கொண்டுவருவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
ஆண்மையை நீக்கும் தண்ட னைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்புவார் கள் என்பது நன்கு தெரியும். இந்த தண்டனை காட்டுமிராண்டித் தனமானது. கொடூரமானது. கற் காலத்துக்கு அழைத்துச் செல்வது, மனிதத் தன்மை இல்லாதது என்று கூறுவார்கள். அந்த மனித உரிமை ஆர்வலர்கள் குற்றங்களில் தொடர் புள்ளவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ஆனால் அவர்கள் குற்றவாளிகளால் பாதிக் கப்படும் குழந்தைகளின் நிலைமை, அவர்களின் எதிர்காலம், மன உளைச்சல், உடல் பாதிப்பு, மன பாதிப்பு ஆகியவற்றை கவனிப் பதில்லை. மனித உரிமை ஆர்வலர் கள் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் மீது கரிசனம் காட்ட வேண்டும். அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல வேண்டும். குற்றவாளிகளுக்கு மட்டும்தான் மனித உரிமை உண்டு என்ற கருத்தை மனித உரிமை ஆர்வலர்கள் முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை உள்பட கொடூர குற்றங்களில் ஈடுபடுவோ ருக்கு கொடூரமான தண்டனை வழங்கினால்தான் அதுபோன்ற குற்றங்களை குறைக்க முடியும்; தடுக்க முடியும். பல்வேறு வெளி நாடுகளில் இதுபோன்ற தண்டனை அமலில் உள்ளது. மனித உரி மைகள் என்ற பெயரில் இதுபோன்ற கடுமையான தண்டனைகள் வழங் குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. ஆண்மை நீக்க தண் டனை வழங்குவதன் மூலம் குழந் தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதில் நினைத் துப் பார்க்க முடியாத மாற்றம் நிகழும் என நீதிமன்றத்துக்கு நம்பிக்கையுள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுவன் மனுதாரர் தன்னிடம் பலமுறை தவறாக நடந்ததாக நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்தில் தெரிவித்துள் ளார். இது உண்மையா, இல்லையா என்பது விசாரணையில்தான் தெரி யும். எனவே, மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய முடி யாது. அதே நேரத்தில் தன்னைத் தேடப்படும் நபர் என அறிவித் திருப்பதால், விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக முடிய வில்லை எனத் தெரிவித்துள்ளார். எனவே அவரை தேடப்படும் நபராக அறிவித்திருப்பதற்கு இடைக் காலத் தடை விதிக்கப்படுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள் ளார்.
ஆண்மை அகற்றுவது என்றால் என்ன?- டாக்டர் டி.காமராஜ் விளக்கம்
ஆண்மை அகற்றுவது பற்றி வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனை தலைவரும் பாலியல் மருத்துவ நிபுணருமான டாக்டர் டி.காமராஜ் கூறியதாவது:
ஓர் ஆணுக்கு ஆண்மை இல்லாமல் செய்ய வேண்டுமானால் ஆண் உறுப்பை அகற்ற வேண்டும் அல்லது விந்து பைகளை அகற்ற வேண்டும். ஆண் உறுப்பை அகற்றினால், அவரால் அந்த நிமிடத்தில் இருந்தே பாலுறவு வைத்துக்கொள்ள முடியாது. மேலும் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுவார். டெல்லியில் ஒரு கிராமத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவரின் ஆண் உறுப்பு அகற்றப்பட்டுள்ளது. விந்து பைகளை அகற்றினால், அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பாலுறவு உணர்ச்சி குறையும். 2 ஆண்டுகளில் முழுமையாக அந்த உணர்வே இல்லாமல் போய்விடும். இந்த 2 முறைகளில் நீதிபதி எதை சொல்கிறார் என்று தெரியவில்லை. ஓர் ஆணின் ஆண்மையை அகற்றுவது என்பது மனித உரிமையை மீறும் செயலாகும். கண்ணுக்கு கண் தீர்வு ஆகாது. அவருக்கு மனைவி இருந்தால், அவரும் பாதிக்கப்படுவார். இது என்னுடைய கருத்து.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT