Published : 26 Jun 2017 12:10 PM
Last Updated : 26 Jun 2017 12:10 PM
தமிழகத்தில் முறையான அனுமதியின்றி நடத்தப்படும் நீச்சல் குளங்களால் உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க அனுமதி பெறாத நீச்சல் குளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இரு ஆண்டுகளுக்கு முன் சென்னை ஆர்.கே. நகர் தனியார் பள்ளி நீச்சல் குளத்தில் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநிலம் முழு வதும் நீச்சல்குளங்களை வரை முறைப்படுத்துவது தொடர் பாக, தமிழக அரசு 7.7.2015-ல் புதிய சட்டம் கொண்டு வந்தது.
இந்த சட்டப்படி நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர், காவல் கண் காணிப்பாளர், மண்டல விளையாட்டு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு ஆணையம், சுகாதாரத் துறை இணை இயக்கு நர், தீயணைப்புத்துறை மண்டல அலுவலர், உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் செயலர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியச் செயற்பொறியாளர், பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர், உயர் கல்வித்துறை இணை இயக்குநர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், காவல் ஆய்வாளர், ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது கட்டாயம். இந்த அனுமதி பெறப்பட்ட பிறகே நீச்சல் குளம் அமைக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு அனுமதி பெறாமல் தனியார் தோட்டங்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளில் நீச்சல் குளங்களைக் கட்டி, சிறுவர்கள் குளிப்பதற்கு கட்டணம் வசூலித்து அனுமதிக்கின்றனர். இந்த நீச்சல் குளங்களில் எந்தவித பாதுகாப்பு வசதியும் இருப்பதில்லை. போதுமான நீச்சல் பயிற்சியாளரோ, நீச்சல் குளத்தில் ஆழம் குறித்த எந்தவித அறிவிப்பு பலகையோ, நீச்சல் குளத்தில் தவறி விழுபவர்களை காப்பாற்றக் கூடிய நீச்சல் வீரர்களோ இருப்பதில்லை.
கோடை விடுமுறையின்போது நீச்சல் பயிற்சி அளிப்பதாக விளம்பரப்படுத்தி அளவுக்கு அதிகமான மாணவ, மாணவியரை சேர்க்கின்றனர்.
அண்மையில் சிவகங்கை மாவட்டம், இலுப்பக்குடியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட நீச்சல் குளத்தில் தேன்மொழி என்பவரின் மகன் முகில் திலீபன் என்ற 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி அழகப்பாபுரம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, மாநிலம் முழுவதும் விதிகளை பின்பற்றாமல் நீச்சல் குளங்களை நடத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அந்த நீச்சல் குளங்களை மூட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் என்பவர் கூறிய தாவது:
நீச்சல் குளத்தில் சட்டப்படி தண்ணீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். குளிக்க வருவோருக்கு தெரியும் வகையில் விதிமுறை போர்டு அமைக்க வேண்டும். அசம்பாவிதம் ஏற்பட்டால் பாதுகாக் கவும், காயமடைந் தால் உடனடியாக சிகிச்சை அளிக்கவும் முதலுதவிப் பெட்டிகள் இருக்க வேண்டும். இப்படி பல்வேறு நிபந்தனை கள் உள்ளன. ஆனால், இந்த நிபந்தனை கள் பின்பற் றப்படு வதில்லை. இதனால் அப்பாவிச் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இந்த நீச்சல் குளங்களை நடத்துவோருக்கு உள்ளூர் போலீஸாரின் ஆதரவும் இருக்கிறது. இவ்வாறு விதிகளை மீறி செயல்படும் நீச்சல் குளங்கள் மாநிலத்தில் பல இடங்களில் உள்ளன. இந்த நீச்சல் குளங்களுக்கு தடை விதிக்க வேண் டும்.
இலுப்பக்குடியில் பத்தாம் வகுப்பு சிறுவன் இறந்த நீச்சல் குளத்தை மூடக்கோரி தமிழர் தேசிய முன்னணி மாநில செயலர் மாறன் என்ற இளமாறன் சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எஸ். பாஸ்கர் மதுரம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT