Published : 27 Aug 2016 10:44 AM
Last Updated : 27 Aug 2016 10:44 AM
சட்டப்பேரவையில் இருந்து என்னை வெளியே தூக்கிச் சென்ற காவலர்கள், ‘உங்களை தூக்குவது எங்கள் வாழ்நாளில் கிடைத்த பாக்கியம்’ என தெரிவித்ததாக மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு மதுரை யில் நடந்த பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார். இதனால், ஸ்டாலி னிடம் அப்படி பேசிய சபைக் காவலர் யார் என்ற விசாரணையில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
சட்டப்பேரவையில் ஜனநாய கம் படும் பாடு என்ற தலைப்பில் திமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு மதுரை பழங்காநத்தத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக் கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டா லின் பேசினார். அப்போது அவர், “அமைச்சர் பன்னீர்செல்வம் நான் வரும் விமானத்தில் மதுரைக்கு வருவதாக இருந் தார். ஒரே விமானத்தில் வந்தாலே பதவி காலியாகிவிடும் என நினைத்து தனது மதுரை வருகையையே ரத்து செய்தார். எதிர்க்கட்சியினரை கண்டு ஆளும்கட்சியினர் அஞ்சுகின்ற னர். பிறகு எப்படி இவர்கள் சுதந்திரமாக செயல்படுவார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “சட்டப்பேரவையில் இருந்து சபாநாயகர் உத்தரவின்பேரில், என்னை அவைக் காவலர்கள் தூக்கிச் சென்று வராண்டாவில் போட்டனர். அப்போது திமுக வினருக்கு கோபம் வந்தது. அப் போது நான் அவர்கள் கடமையை அவர்கள் செய்கின்றனர் என அவர்களை சமாதானம் செய் தேன். அப்போது என்னை தூக்கிய காவலர் ஒருவர், என் காதில் ‘உங்களை தூக்குவது என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியம்’ என பெருமையாக சொன்னார். அது வலது புறமா, இடது புறமா என சொல்லமாட்டேன். நான் அதை சொன்னால் அந்த காவலர் வேலை போய்விடும்” என்றார்.
ஸ்டாலின் சொன்ன அந்த காவலர் யார் என்று உளவுத்துறை போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஸ்டாலின் பேச்சு விவரங்கள் அடங்கிய வீடியோ, ஆடியோ ஆதாரங் களை மேலிடத்துக்கு நேற்று முன்தினம் இரவே உளவுத்துறை போலீஸார் அனுப்பிவிட்டனர். இதனால், ஸ்டாலினை தூக்கிய சட்டப்பேரவைக் காவலர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT