Published : 28 Dec 2013 12:00 AM
Last Updated : 28 Dec 2013 12:00 AM
இந்த வழக்கில் 60 நாள்களுக்குள் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால், கப்பல் ஊழியர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்ற மனுவை விசாரித்த தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர்மன்றம் 35 பேருக்கும் வியாழனன்று ஜாமீன் வழங்கி யது. இந்த உத்தரவை எதிர்த்து, கியூ பிரிவு சார்பில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அவசர சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் அவர்களை ஜாமீனில் விடுவிக்க, அந்நாட்டின் தூதரகம் மூலம் தான் உத்தரவாதம் பெற வேண்டும். ரூ. 10 ஆயிரம் பிணையில் விடுதலை செய்தால், அவர்கள் தங்கள் நாடுகளுக்கு தப்பி செல்ல வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு அவர்களை பிடிக்க முடியாது. வெறுமனே பிடிவாரன்ட் மட்டுமே பிறப்பிக்க முடியும்.
இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு முரணாக உள்ளது. எனவே, அவர்களுக்கு ஜாமீன் வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கியூ பிரிவு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்குரைஞர் கே. சிவக்குமார் வாதிட்டார்.
அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) கே.வெங்கடசாமி, அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கும் ஜாமீன் வழங்கி தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர்மன்றம் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவுக்கு, மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், சீராய்வு மனு மீதான விசாரணை வரும் ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT