Last Updated : 30 Oct, 2014 10:12 AM

 

Published : 30 Oct 2014 10:12 AM
Last Updated : 30 Oct 2014 10:12 AM

சூரசம்ஹார நிகழ்ச்சியில் சுவாமி தரிசனம் செய்ய ரூ.1,000 வசூல்: திருச்செந்தூரில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் அவதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குவிந்த பக்தர்கள், சுட்டெரிக்கும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடற்கரையில் இடம்பிடிக்க முயற்சித்தனர்.

அதிகாலை 1 மணி முதலே மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந் தனர். வழக்கமாக தரிசன கட்டண மாக ரூ.20, ரூ.100, அதிகபட்சமாக ரூ.250 வசூல் செய்யப்படும். ஆனால், நேற்று சுவாமி தரிசனத்துக்கு பக்தர்களிடம் ரூ.1,000 வரை வசூல் செய்யப் பட்டுள்ளது. தரிசன டிக்கெட் இல்லாமலேயே பக்தர்களிடம் சிலர் பணத்தை வாங்கிக் கொண்டு சுவாமி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பக்தர்களின் பொருள்களை பாதுகாக்க டோக்கன் கட்டணம் ரூ.5க்கு பதிலாக நேற்று ரூ.10 வசூல் செய்ததாக பக்தர்கள் புகார் செய்தனர். இதுபோலவே முடிக் காணிக்கை கட்டணம் ரூ.10 தான். ஆனால், ரூ.200 வரை வசூலிக் கப்பட்டுள்ளது.

கடற்கரையில் சாக்கடை

கடலில் கழிவுநீர் கலப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள் ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடற்கரையில் 4 இடங்களில் கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தன. சூரசம்ஹாரம் நடைபெறும் பகுதியில் குழாய் உடைந்து கழிவுநீர் வெள்ளமென கடற்கரையில் வழிந்தோடியது. இது பக்தர்களை வேதனையடைய வைத்தது.

மேலும் படுமோசமான சாலைகளால் வாகனங்களில் வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்ட நிலையில் போதுமான கழிப்பறை வசதிகள் மற்றும் தண்ணீர் வசதிகள் இல்லா ததால் பெண் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x