Published : 10 Feb 2017 09:01 AM
Last Updated : 10 Feb 2017 09:01 AM
பரபரப்பான அரசியல் மாற்றங் களுக்கு மத்தியில் தமிழக அரசியல் களம் நகர்ந்து கொண் டிருக்கிறது. முதல்வர் பொறுப் பில் ஓ.பன்னீர்செல்வம் இருந்து வருகிறார். ஆனால், பெரும் பான்மை எம்எல்ஏ-க்கள் சட்டமன்ற கட்சித் தலைவராக தன்னை தேர்வு செய்ததற்கான ஆதாரக் கடிதத்தை சசிகலா கையில் வைத்திருக்கிறார்.
இதில் வெற்றிபெறப் போவது ஓ.பன்னீர்செல்வமா, சசிகலாவா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இறுதியில் இந்தக் கேள்விக்கு விடை தரப்போகும் களம் தமிழக சட்டப்பேரவைதான். சட்டப்பேரவை யில் உறுப்பினர்கள் அளிக்கும் ஓட்டுகளைப் பொறுத்தே களத்தில் இருப்பவர்கள் வெற்றியை நிரூபிக்க முடியும். 234 உறுப்பினர்கள் உள்ள தமிழக சட்டப்பேரவையில், 118 உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ, அவர்கள் பெரும்பான்மையை நிரூபித்ததாக கருதப்படுவர்.
மொத்தம் 89 உறுப்பினர்களைக் கொண்ட திமுக, 8 உறுப்பினர் களைக் கொண்ட காங்கிரஸ் உள் ளிட்டோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தால், அவரது கை ஓங்கும். அந்த நிலையில் மேலும் சில எம்எல்ஏக்கள் வந்தால் பன்னீர்செல்வத்தால் பெரும் பான்மையை எளிதில் நிரூபிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
ஆனால், இத்தகைய சூழ்நிலை யில், அதிமுக உறுப்பினர்கள் எத்தனை பேர் ஓட்டுப் போட்டால் பிரச்சினையின்றி வெற்றிபெற முடியும் என்ற கேள்வி எழுந்துள் ளது. இந்தக் கட்டத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் குதிரை பேரம் நடப்பதை தடுப்பதற்காக கடந்த 85-ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, 52-வது சட்ட திருத்தம் மூலம் கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, இரு சந்தர்ப்பங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியிழப்பார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உறுப்பினர் ஒருவர் தாமாக முன்வந்து கட்சியில் இருந்து விலகுதல் மற்றும் கட்சி கொறடா உத்தரவுக்கு மாறாக சட்டமன்றத்தில் ஓட்டுப் போடுதல் ஆகிய இரு சந்தர்ப்பங்களில் அவர் தகுதியிழப்பார். இதில், கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒருபங்கு உறுப்பினர்கள் பிரிந்து வேறு கட்சியில் சேருவது அனுமதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது.
ஆனால், இதிலும் முறைகேடுகள் நடந்ததால், கடந்த 2003-ம் ஆண்டு 92-வது சட்ட திருத்தம் மூலம் இந்த நடைமுறை திருத்தப்பட்டுவிட்டது. தற்போதுள்ள நடைமுறைப்படி, மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் விலகி, தங்களை ஒரு குழுவாக கருதி இயங்கலாம். அல்லது அவர் கள் வேறு கட்சியுடன் இணைய லாம். இந்த எண்ணிக்கை இல்லா விட்டால், அவர்கள் உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். உறுப்பினர்களை பதவியிழக்கச் செய்யும் முடிவில், சபாநாயகரின் தீர்ப்பே இறுதியானது என்று தெரி விக்கப்பட்டிருந்தாலும், அந்த முடிவு நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது என்று நீதிமன்ற தீர்ப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில், அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 134. இதில் 2 பங்கு அதாவது, 90 எம்எல்ஏ-க்கள் இணைந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே அவர்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்ப முடியும். சட்டமன்றத்தைப் பொறுத்தமட்டில், கட்சி கொறடா உத்தரவுதான் அதி காரப்பூர்வ உத்தரவு. கொறடாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் உத்தரவிடுவார். அதிமுக-வில் தற் போது சசிகலா பொதுச்செய லாளராக தேர்வு செய்யப்பட்டுள் ளதே கேள்விக்குறியாக உள்ளதால், அவர் பிறப்பிக்கும் உத்தரவு எந்த அளவுக்கு செல்லும் என்பது நீதிமன்றத்தில்தான் முடிவாகும்.
இதற்கிடையே, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தனியாக பொதுக்குழு, செயற்குழு நடத்த ஏற்பாடு செய்து வருவதால், கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ உத்தரவை அளிக்கும் அதிகாரம் படைத்தவர் யார் என்பதே சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT