Published : 27 Jan 2014 05:22 PM
Last Updated : 27 Jan 2014 05:22 PM
இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தக் கோரி தமிழகம், புதுவை மற்றும் மும்பையில் நாளை (செவ்வாய்க்கிழமை) சிறை நிரப்பு போராட்டம் நடத்துவுள்ளதாக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநில தலைவர் ஜைனுல் ஆபிதீன் கூறும்போது, "இந்தியாவில் மொத்தம் 20% முஸ்லீம்கள் உள்ளார்கள். அவர்களில் 2% அல்லது 3% முஸ்லீம்கள் மட்டுமே உயர்கல்வியை பெறமுடிகிறது.
மத்திய அரசால் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கையில் பெரும்பாலான முஸ்லீம்கள் பொருளாதாரத்திலும், கல்வியறிவிலும் பின் தங்கியிருப்பதாகவும், அவர்களுக்கு 10% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதை கண்டுகொள்வேயில்லை.
எனவே சமூக நிதியை கருத்தில் கொண்டு முஸ்லீம்களுக்கு மத்தியில் 10% இட ஒதுக்கீடும், மாநிலத்தில் 7 % இட ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி தமிகம், புதுவை, மும்பை ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை சிறை நிரப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT