Published : 20 Jun 2015 08:22 AM
Last Updated : 20 Jun 2015 08:22 AM

காணாமல்போன விமானத்தை அதிநவீன தனியார் கப்பல் மூலம் தேடும் பணி தொடக்கம்: ‘சாகர் நிதி’ நீர் மூழ்கி கப்பலும் தேடி வருகிறது

சிதம்பரம் அருகே காணாமல் போன இந்திய கடலோர காவல்படை விமானத்தை தேடும் பணியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதி நவீன ஆராய்ச்சிக் கப்பலும் நேற்று இணைந்தது.

இந்திய கடலோர காவல்படையின் சிறிய ரக விமானம் கடந்த ஜூன் 8-ம் தேதி சிதம்பரம் அருகே காணாமல் போனது. இதைத் தேடும் பணியில் இந்திய கடலோர காவல்படை, தமிழக கட லோர காவல்படை, இந்திய கடற் படை மற்றும் பல்வேறு கடல் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன. அப்போது சிதம்பரத்தி லிருந்து 16 கடல் மைல் தொலை வில் காணாமல் போன விமான கருவியின் சிக்னல் கடலுக்கு அடியி லிருந்து கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் நீர் மூழ்கி கப்பலான ‘சாகர் நிதி’ கடந்த 14-ம் தேதி முதல் கடல் நீருக்கடியில் தேடி வந்தது. சிக்னல் விட்டு விட்டு கிடைத்து வரு வதால் விமானத்தை தேடும் பணி யில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

கடற்பரப்பில் விமானத்தின் பாகங்கள் கிடைத்ததாகவோ, மனித உடல்கள் கிடைத்ததாகவோ மீனவர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை.

இதுவரை எந்தவித நம்பத் தகுந்த தடயங்களும் கிடைக்காத நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத் தின் அதிநவீன ஆராய்ச்சிக் கப்பல் ‘ஒலிம்பிக் கெனைன்’ உதவியை கடலோர காவல்படை நாடியது. பின்னர் காக்கிநாடாவில் இருந்து கடந்த ஜூன் 17-ம் தேதி புறப்பட்ட கப்பல், நேற்று சிதம்பரம் அருகே வந்தடைந்து, காலை 7 மணி முதல் தேடும் பணியை தொடங்கியது.

இது தொடர்பாக இந்திய கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த கப்பலில் இருந்து, 1000 மீட்டர் ஆழம் வரை அதிக வெளிச் சத்தை உமிழும் விளக்குகளுடன் கூடிய, போட்டோ மற்றும் வீடியோ பதிவு செய்யும் அதிநவீன கேம ராவை அனுப்பி தேடும் பணி நடை பெற்று வருகிறது. ஒரு பகுதியில் தேடி முடித்துவிட்டது. தற்போது மற்றொரு பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

‘சாகர் நிதி’ நீர் மூழ்கி கப்பலும் வேறு பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை நம்பத்தகுந்த தடயம் எதுவும் கிடைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x