Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க அண்ணா தொழிற்சங்கப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இது தொடர்பாக அ.தி.மு.க தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆலோசனை கூட்டம்
முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து அண்ணா தொழிற்சங்க பேரவையின் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலத்தில் வியாழக்கிழமை நடந்தது. அண்ணா தொழிற்சங்கப் பேரவை தலைவர் தாடி ம. ராசு தலைமை தாங்கினார்.
அ.தி.மு.க. அவைத் தலைவர் இ. மதுசூதனன், பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் மாநில அமைச்சர்கள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ரத்ததான முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள், மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும்.
வெற்றிக்கு உழைப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடக்கவுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெறவைத்து ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மொத்தம் 9 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT