Published : 26 Aug 2016 09:28 AM
Last Updated : 26 Aug 2016 09:28 AM
சோதனை முயற்சியாக ரயில் பெட்டி களில் பொருத்தப்பட்ட கண் காணிப்பு கேமராக்களின் செயல் பாடு திருப்திகரமாக இருப்பதால், ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்ததும், மற்ற விரைவு ரயில் களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கார்டு பயணம் செய்யும் கடைசி பெட்டிக்கு முன்ன தாக மகளிர் பெட்டி இணைக்கப் படுகிறது. இரவு நேரங்களில் மகளிர் பெட்டிக்குள் சமூக விரோதிகள் நுழைந்து பணம், நகை பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதை தடுக்கும் வகையில் ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. முதல்முறையாக, டெல்லி - திருவனந்தபுரம் விரைவு ரயிலில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட புதிய ரயில் பெட்டி இணைக்கப்பட்டது. பின்னர், சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் ராமேசுவரம் விரைவு ரயில், செந்தூர் விரைவு ரயிலிலும் கண்காணிப்பு கேமராவுடன் கூடிய மகளிர் பெட்டி இணைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இயக்கப்பட்டு வருகிறது.
ரயில் பெட்டிகளில் பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதால், ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் பெற்று, முக்கியமான மற்ற விரைவு ரயில்களின் பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது.
இதுபற்றி தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
முதலில் ராமேசுவரம் விரைவு ரயில் உட்பட 3 விரைவு ரயில்களின் பெட்டிகளில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இயக் கப்பட்டன. இந்த கேமராக்கள் ‘ஜிபிஎஸ்’ வசதி கொண்டவை. ஓடும் ரயிலில் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்தால், அது எந்த இடத்தில் நடந்தது என்பதை துல்லிய மாக அறியமுடியும். கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கப்படும். இதற்கான ‘கருப்புப் பெட்டி’ ரயிலில் இருக்கும் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.
கேமரா பொருத்தப்படுவதால் பயணிகளின் சுதந்திரம் பாதிக்கப் படுவதாக சிலர் கூறினர். ஆனால், அதைவிட பயணிகளின் பாதுகாப்புதான் முக்கியம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பயணிகளின் கருத்துகள் குறித்து ரயில்வே வாரியத்திடம் தெரி வித்துள்ளோம். ரயில் பெட்டி களில் சிசிடிவி கேமரா பொருத்த வாரியம் ஒப்புதல் அளித்தால், படிப்படியாக அனைத்து ரயில் களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT