Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக ஆதரவுடன் தற் போதைய மார்க்சிஸ்ட் எம்.பி.டி.கே.ரங்கராஜன் மீண்டும் நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த எஸ். அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி (திமுக), நா.பாலகங்கா (அதிமுக), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட்) ஜி.கே.வாசன், ஜெயந்தி நட ராஜன் (காங்கிரஸ்) ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம், வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கான பிப்ரவரி 7-ல் தேர்தல் நடக்கவுள்ளது.
ஒரு உறுப்பினரின் வெற்றிக்கு 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை. சட்டசபையில் தற் போதுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி சார்பில் ஐந்து எம்.பி.க்களை தேர்ந் தெடுக்க முடியும்.
இதில் நான்கு வேட்பாளர்கள் அதிமுக சார்பிலும், ஒரு வேட்பாளர் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பிலும் நிறுத்தப்படுவர் என எதிர்பார்க் கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த மாநிலங்களவைத் தேர்த லில், கம்யூனிஸ்டுகள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை கிடைக்கும் ஒரு இடத்தில் மார்க் சிஸ்ட் போட்டியிடும் என்று தெரிகிறது.
அந்தக் கட்சி சார்பில் தற் போதைய எம்.பி.யான டி.கே.ரங்க ராஜனே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் அல்லது கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர் கள் மற்றும் நிர்வாகிகள் தனித் தனியே சனிக்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், ‘‘மாநிலங்களவைத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவில்லை. ஆனால், எங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்போம்’’ என்றார்.
திமுக வேட்பாளராக திருச்சி என்.சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள், ஓரிரு தினங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ஆதரவை நம்பி, தேமுதிக சார்பில் இளங் கோவன் நிறுத்தப்பட்டார். ஆனால், கடைசி நேரத்தில் காங்கிரஸின் ஆதரவு, திமுக வேட்பாளர் கனிமொழிக்கு என அறிவிக்கப்பட்டதால் தேமுதிக வேட்பாளர் தோல்வியடைந்தார்.
இதைக் கருத்தில் கொண்டு, இம்முறை வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என விஜயகாந்த் முடிவெடுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT