Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM
மத்திய அமைச்சர் நாராயணசாமி காரின் கீழ் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தை யடுத்து அவரது வீடு உள்ள வீதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ) உதவியையும் புதுவை காவல்துறை நாடியுள்ளது.
மத்திய அமைச்சர் நாராயண சாமியின் வீடு எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ளது. இங்கு புதன்கிழமை குழாய் வெடி குண்டு கண்டறியப்பட்டு தமிழக காவல்துறை உதவியுடன் செயல் இழக்க வைக்கப்பட்டது.
இதையடுத்து காவல் துறை யினர் எல்லையம்மன் கோயில் வீதியில் இருபுறமும் தடுப்புகள் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வீதிக்குள் செல்வோர் அனை வரும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரி டிஜிபி காமராஜ், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க 5 தனிப்படைகளை அமைத்துள்ளார். அதேபோல் இவ் வழக்கு விசாரணை சிபிசிஐடியிடம் தரப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியை தமிழக க்யூ பிராஞ்ச் டிஎஸ்பி ஞானவேல் தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமையன்று நேரில் வந்து ஆய்வு செய்தனர். வெடிகுண்டு வைக்கப்பட்ட இடம், அதன் மாதிரி கிடந்த இடம் உள்ளிட்டவற்றுக்கும், கைப்பற்றப்பட்ட வெடிபொருள் கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் உதவியையும் (என்.ஐ.ஏ) புதுவை காவல்துறை நாடும் என்று டிஜிபி காமராஜ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் உள்ள விஐபிக்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக காவல் துறையினர் மூலம் அறிவுறுத்த உள்ளதாகவும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT