Published : 01 Oct 2014 10:31 AM
Last Updated : 01 Oct 2014 10:31 AM
வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் என கல்வியில் பின்தங்கிய 4 மாவட்ட மக்களின் உயர் கல்வி வளர்ச்சிக்காக திரு வள்ளுவர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது
இதற்கிடையில், 2014-15-ம் கல்வியாண்டில் நவம்பர் மாதம் நடக்கும் பருவ தேர்வுக்கான கட்ட ணத்தை உயர்த்தி பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு குறித்து அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் பல்கலைக் கழக பதிவாளர் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில், ‘‘பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் வணங்காமுடி, முருகன், வீரமணி, போஸ் ஆகியோர் கொண்ட குழு பரிந்துரையின்படி, 2014-15-ம் கல்வி ஆண்டு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு முதல் விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கான ஊதிய நிலுவைத் தொகை வழங்க ரூ.1.25 கோடி கூடுதலாக செலவாகிறது. இதுதொடர்பாக மாணவர்களுக்கு விளக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.
இந்நிலையில், பல்கலைக்கழக காகித பயன்பாட்டை தவிர்க்க தேர்வுத்துறை முழுவ தும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள் ளது. மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேரும்போதே அவர் களது விவரம் கணினியில் பதி வேற்றம் செய்யப்படும். அடுத்த பருவ தேர்வுக்கு அவர் விண்ணப் பிக்க தேவையில்லை. அவர் செலுத்த வேண்டிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். அதேபோல, உள்மதிப்பீடுகளை ஆன்லைனில் கல்லூரி நிர்வாகங் கள் பதிவு செய்ய வேண்டும். சுமார் 2.50 லட்சம் மாணவர்களின் விவரங்கள் கணினியில் பதிவேற் றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் அசோகன் கூறும் போது, ‘‘தேர்வுத் துறை முழுவதும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மாணவரின் விவரம் பதிவு செய்துவிட்டால் போதும். அவர் தேர்ச்சி பெற்றுள்ள பாடங்கள், தேர்ச்சிபெறாத பாடங்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்குவது ஆகிய ஆன்லைன் முறையில் பராமரிக்கப்படும். மதிப்பெண் பட்டியல் எளிதில் தண்ணீரில் நனையாதபடி, தரமான காகிதத்தில் மாணவர்களின் புகைப்படத்துடன் இருக்கும். 100 சதவீதம் காகித பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுவரை 90 சதவீதம் கல்லூரி மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT