Last Updated : 11 Feb, 2017 08:51 AM

 

Published : 11 Feb 2017 08:51 AM
Last Updated : 11 Feb 2017 08:51 AM

எங்களை யாரும் கடத்தவில்லை: கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் விளக்கம்

எங்களை யாரும் கடத்தவில்லை என கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளித் துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல் பாக்கம் அடுத்த கூவத்தூர் பகுதியில் தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள 2 பெண் எம்எல்ஏக்கள் உட்பட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் செய்தியாளர்களை நேரில் சந்தித்து விளக்கமளித்தனர்.

காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன்:

சசிகலாவுக்கு ஆத ரவு தெரிவிப்பதற்காக நாங்கள் அனைவரும் ஓரிடத்தில் திரண் டிருக்கிறோம். நாங்கள் சுதந்திர மாக இங்கு தங்கியுள்ளோம். அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக் கள் அனைவரும் அவர்கள் விருப் பப்பட்ட இடத்திலேயே வசித்து வருகின்றனர். எங்களைப் பார்க்க யாருக்கும் தடையில்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக் களை, எம்எல்ஏக்களின் குடும்பத் தினரோ அல்லது உறவினர்களோ தாக்கல் செய்யவில்லை. சில சூழ்ச்சியாளர்களின் உதவியோடு திமுகவினர் செய்து வருகின்றனர். தொலைபேசியில் மர்ம நபர் கள் தொடர்புகொண்டு, தேவை யில்லாத பேச்சுகளை பேசுவதால் தொலைபேசியை அணைத்து வைத்துள்ளோம். ஆளுநரின் உத் தரவுக்குப் பிறகு எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.

பெரம்பலூர் எம்எல்ஏ இளம்பிறை தமிழ்செல்வன்:

பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்துள்ள மதுசூத னன், அவைத் தலைவராக இருந்தபோதுதான் சசிகலாவை முன்மொழிந்தார். சட்டப்பேர வைக் கூட்டத்தில் பன்னீர்செல்வத் தைப் பார்த்து பேசிய ஸ்டாலின், 5 ஆண்டுகள் நீங்கள் முதலமைச் சராக இருக்க வேண்டும். அதற்கு எங்களின் ஆதரவு இருக்கும் என தெரிவித்தார். இதற்கு பன்னீர்செல்வம் சிரித்தபடி அமைதியாக இருந்தார். திமுக வுடன் பன்னீர்செல்வம் இணைந் திருப்பது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா:

கடந்த 2 நாட்களாக நான் காணாமல் போயிருப்பதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நான் காணவில்லை எனக் கூறி அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்து கின்றனர். எங்களின் சொந்த விருப் பத்தின்பேரில் நாங்கள் இங்கு தங்கியுள்ளோம். இணையதளத் தின் உதவியோடு, செல்போனில் தொடர்புகொண்டு அநாகரிகமான வார்த்தைகளை பேசுகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்ச லுக்கு ஆளாகியுள்ளோம். எனவே, செல்போனை அணைத்து வைத் துள்ளோம்” என்றார்.

குடியாத்தம் எம்எல்ஏ ஜெயந்தி:

கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், முதல்வர் பன்னீர்செல்வம் எதிர்க் கட்சிகளின் வார்த்தைகளை கேட்டு மகிழ்ச்சியுடன் செயல்பட்டார். அதிமுகவை கவிழ்ப்பதற்காக, எதிர்க்கட்சி செயல்பட்டு வருகிறது. அதைத் தடுப்பதற்காகவே நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். எந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் கடத்தப்படவில்லை. அதிமுகவின் நலனுக்காக நாங்களாகவே விருப்பப்பட்டு, இங்கு தங்கியுள் ளோம். அனைத்து எம்எல்ஏக் களுக்கும் 2 ஆயிரம் தொலை பேசி அழைப்புகள் வந்துள்ளன. எங்களை மிரட்டுகிறார்கள். தொகுதி பக்கம் வந்தால் எங்களை தாக்குவோம் என்றும், பெண் எம்எல்ஏக்களை தகாத வார்த்தைகளைக் கூறியும் இழிவுபடுத்துகின்றனர். அதனால், தொலைபேசியை அணைத்து வைத்துள்ளோம். அதிமுகவை வீழ்த்த வேண்டும் என வியூகங் கள் வகுத்து வருகிறார்கள். அதற்கு இடமளிக்காமல், சசிகலா தலைமையில் நாங்கள் செயல்படு வோம்” என்றார்.

சோளிங்கர் எம்எல்ஏ பார்த்தீபன்:

திமுகவின் கைப்பாவையாக முதல்வர் பன்னீர்செல்வம் மாறி யிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமைக்கு எதிராக அவர் தெரிவித்துள்ள புகார் முற்றிலும் பொய்யானது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் சகல வசதிகளுடன் இங்கு தங்கியுள்ள னர். அதிமுகவை வீழ்த்துவதற் காக, செயல்படுத்தப்பட்டுள்ள வியூகங்களை முறியடிப்போம்.

கம்பம் எம்எல்ஏ ஜக்கையன்:

அதிமுக சட்டப்பேரவை உறுப் பினர்கள் யாரும் கடத்தப்பட வில்லை. தேவையான நேரத்தில் அனைவரும் தலைமையை சந்திப் போம். மேலும், எம்எல்ஏ-க்கள் உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறானது. எங்களின் நிலையை தெளிவு படுத்துவதற்காகவே, நாங்கள் ஊடகங்களை சந்தித்து விளக்க மளித்து வருகிறோம்.

குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன்:

நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருப்பவர்கள், எம்எல்ஏக்களின் குடும்பத்தினர் அல்ல, திமுக மற்றும் பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள். முதல்வர் பன்னீர்செல்வம் 2 மாதங்களாக அமைதியாக இருந்துவிட்டு, தற்போது தலைமைக்கு எதிராக புகார் தெரிவித்திருப்பதன் மூலம், திமுக மற்றும் பாஜவின் உத்தரவை தமிழகத்தில் அமல்படுத்தும் பணிகளை தொடங்கியிருப்பது தெரிகிறது. அதிமுகவை அழித்து தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கும் பாஜகவின் கனவு பலிக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x