Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது.
அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் அசோக் சித்தார்த்தா, கோபிநாத் மற்றும் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் முதல் வேட்பாளர் பட்டியலை திருவள்ளூரில் சனிக்கிழமை வெளியிட்டனர்.
இதன்படி, ஜனார்த்தனன் (வடசென்னை), முரளிகிருஷ்ணன் (எ) சமரன் (மத்திய சென்னை), பாலாஜி (தென் சென்னை) , சத்தியமூர்த்தி (திருவள்ளூர் - தனி), தாஸ் (அரக்கோணம்), ரஜினிகாந்த் (தர்மபுரி), சான்பாஷா (கிருஷ்ணகிரி), கலா (நீலகிரி - தனி), தமிழ்நாடு செல்வம் (கோவை), சுந்தரம் (பொள்ளாச்சி), சேதுபதி (ஈரோடு), விநாயகமூர்த்தி (சேலம்), செல்வராஜ் (நாமக்கல்), பகத்சிங் (எ) பழனிச்சாமி (திண்டுக்கல்), தங்கதுரை (தேனி), ராக்கமுத்து (திருச்சி), நடராஜன் (திருச்சி), செல்வராஜ் (பெரம்பலூர்), கமலவேல் செல்வன் (விருதுநகர்), ராஜ்குமார் (ராமநாதபுரம்), கலியமூர்த்தி (விழுப்புரம் - தனி), சக்திவேல் (கள்ளக்குறிச்சி), செந்தில்
முருகன் (கடலூர்), பச்சமுத்து (சிதம்பரம்-தனி), கணேசன் (ஆரணி), முகம்மது அப்பாஸ் (பெரும்புதூர்), டாக்டர் சத்தியராஜ் (காஞ்சிபுரம் - தனி), ஜவஹர் (கன்னியாகுமரி) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர் இரண்டாவது பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும். கட்சித் தலைவர் மாயாவதி தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் பிரச்சா ரம் மேற்கொள்ள உள்ளார். இவ்வாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT