Published : 30 Mar 2014 02:57 PM
Last Updated : 30 Mar 2014 02:57 PM

ஊழலுக்கு எதிரானவர்கள் என்பதை நீலகிரி மக்கள் நிரூபிக்க வேண்டும்: நாஞ்சில் சம்பத்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஊழலுக்கு எதிரானவர்கள் என்பதை நீலகிரி மக்கள் நிரூபிக்க வேண்டுமென, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.

நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ் ணனுக்கு ஆதரவாக குன்னூர், உதகையில் நாஞ்சில் சம்பத் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்.

உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் அவர் பேசியது:

இந்தத் தேர்தல் ஜனநாயகத்தை குழியில் தள்ளிய மத்திய காங்கிரஸ் அரசை முடிவுக்கு கொண்டுவரும் யுத்தம். நீலகிரி மக்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தப்ப முயற்சிக்க, நீலகிரி தொகுதி மக்களை கேடயமாக ஆ.ராசா பயன்படுத்துகிறார். தவறு செய்துவிட்டு அதற்கு நியாயம் கற்பிக்கிறார்; இதற்கு துணை போகக் கூடாது. அதிமுக இல்லாமல் மத்திய அரசை தீர்மானிக்க முடியாது. பிரதமர் பதவி முதல்வரை தேடி வருகிறது; அதை மக்கள் தீர்ப்பாக வழங்க வேண்டும் என்றார்.

மாநிலங்களவை உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளருமான ஏ.கே.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், உதகை எம்.எல்.ஏ. புத்திசந்திரன், அவைத் தலைவர் தேனாடு லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x