Published : 09 Apr 2017 07:17 AM
Last Updated : 09 Apr 2017 07:17 AM
நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிக்காக உயர் நீதிமன்றம் நேரடியாக நிதி திரட்டி மாவட்டங்களுக்கு வழங்கி வருகிறது.
தமிழகம் முழுவதும் விவசாயத் துக்கும், நிலத்தடி நீர்மட்டத்துக்கும் பேராபத்தை ஏற்படுத்தி வரும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு, இப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் நிதி பற்றாக்குறையால் பல்வேறு மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் தேவையான நிதியை அரசே ஒதுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருப் பினும் இதற்காக தமிழக அரசு இதுவரை தனியாக நிதி ஒதுக்க வில்லை.
நிதி இல்லாததால் சீமைக் கரு வேல மரங்கள் அகற்றும் பணி நின்றுவிடக் கூடாது என்பதற்காக இப்பணிக்காக நிதி திரட்டுவதற்காக உயர் நீதிமன்ற கிளையில் பதிவாளர் பெயரில் தனி வங்கிக் கணக்கு தொடங்க நீதிபதி ஏ.செல்வம் உத்தரவிட்டார். அந்த கணக்கில் அவர் முதல் ஆளாக ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்து நிதி சேகரிப்பை தொடங்கிவைத்தார். தொடர்ந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலர் இந்த கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனர்.
பல நீதிபதிகள் தாங்கள் விசாரிக்கும் வழக்குகளில் விதிக் கும் அபராதத் தொகையை இந்த கணக்கில் செலுத்த வைத்து உதவி வருகின்றனர். தற்போது ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங் களும் அவர்களின் ஊழியர்கள், பொதுமக்களிடம் அன்பளிப்பாக பெறப்பட்ட தொகையை சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற் காக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு இந்தக் கணக்கில் இது வரை ரூ.14 லட்சம் வரை சேர்ந் துள்ளது.
இந்தப் பணத்தில் இருந்து சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிக்காக மதுரை மாவட்டத்துக்கு ரூ.3 லட்சமும், திண்டுக்கல், ராம நாதபுரம், சிவகங்கை மாவட்டங் களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணத் தில் வைகை நதியில் சீமைக் கரு வேலம் மரங்களை அகற்றும் பணியை நீதிபதிகளே தொடங்கி வைத்துள்ளனர்.
சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டதுடன், அந்த உத்தரவை அமல்படுத்தும் பணியில் உயர் நீதிமன்ற நீதிபதிகளே நேரில் இறங்கியுள்ளனர்.
அதோடு, நீதிமன்ற உத்தரவுப்படி சீமைக் கருவேல மரங்களை அகற்றத் தேவையான நிதியையும் நீதிபதிகளே திரட்டி வழங்குவது நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடைபெறாத நிகழ்வாக பார்க்கப் படுகிறது.
இது தொடர்பாக வழக்கறிஞர் ஆணையர் ஆர்.காந்தி கூறும் போது, ‘‘சீமைக் கருவேல மரங் களை அகற்றும் பணி சமூகப் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இதனால் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நிதி பற்றாக் குறையால் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக நிதி திரட்டி தேவைப் படும் மாவட்டங்களுக்கு வழங்கப் படுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT