Published : 04 Jul 2016 08:58 AM
Last Updated : 04 Jul 2016 08:58 AM
சென்னையில் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று காவல்துறை உறுதிப்படுத்தியதில் இருந்தே தாமிரபரணி நதி பாயும் இச்சீமையின் இமேஜ் மேலும் சரிந்துவிட்டதாகவே தெரிகிறது.
தாமிரபரணி நதியால் வாழ்வு பெறும் திருநெல்வேலியில் உலக அளவில் பிரபலமான அல்வா தயாராவது குறித்து சொல்லித் தெரியவேண்டியது இல்லை. ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் திருநெல்வேலி சீமை, அல்வாவுக்கு மட்டுமல்ல அரிவாளுக்கும் பெயர் போனது என்று சொல்லும் அளவுக்கு ஜாதி மோதல்களும், கொலைச் சம்பவங்களும் இங்கு நடந்தேறி வருகின்றன.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கெனவே நடை பெற்ற, தற்போதும் நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் அல்வாவுக்கு பதில் அரிவாள் முத் திரையை பதித்துக்கொண்டு இருப் பது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அந்த முத்திரைக்கு வலுசேர்க்கும் வகையிலான நிகழ்வுகளும் கடந்த சில ஆண்டுகளில் நடந்தேறின. தமிழகத்தில் வடமாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்களில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கள் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தபோது பெரும் தலைகுனிவு ஏற்பட்டது.
வேலையில்லாத் திண்டாட்டத் தால் கூலிப்படையில் சேரும் அவலத் துக்கு இங்கு உள்ள இளைஞர்கள் தள்ளப்பட்டு வருவது குறித்த சமூக பிரச்சினை, பல்வேறு கருத் தரங்குகளிலும், விவாதங்களிலும் பேசப்படுவதுடன் முடிந்துவிடு கிறது. மேற்கொண்டு ஆக்கப்பூர்வ மான செயல்பாடுகள் இல்லாததால் இங்கு உள்ள இளைஞர்களில் பெரும்பாலானோர் இன்னமும் சென்னை, மும்பை, கோவை என்று பெருநகரங்களை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களில் சிலர் பணத்துக்காக சமூக விரோத கும்பல்களில் சேர்ந்துகொண்டு செய்யும் குற்றச் செயல்கள் திருநெல்வேலியின் பெருமைக்கு களங்கத்தை ஏற் படுத்துகின்றன.
தற்போது சென்னை நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப் பகலில் சுவாதியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய பொறியியல் இளைஞர் ராம்குமாரால் திருநெல்வேலி சீமை மேலும் தலைகுனிவை சந்தித்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.
சாதுவாக காட்டிக்கொண்டு மூர்க்கத்தனமாக செயல்பட்ட ராம் குமாரின் செயல்பாடு ஒட்டுமொத்த திருநெல்வேலிகாரர்களின் இமேஜை சரித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இது தொடர் பாக பெரிய விவாதங்களும், கருத் துப் பரிமாற்றங்களும், கேலிகளும் கூட தற்போது வலம் வருகின்றன.
வேலைவாய்ப்பு தேவை
இதுகுறித்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ம.பிரிட்டோ கூறும் போது, “தென்னகத்தின் ஆக்ஸ் போர்ட் என்று பெயர் பெற்ற பாளையங்கோட்டையில் இன்றும் சிறந்த கல்வியை போதிக்கும் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தயாராகிறார்கள். இதுபோன்று இங்கு உள்ள பல்வேறு கல்வி நிலையங்களிலும் கல்வி கற்கும் இளைஞர்கள் மத்தியில் நல்லெண் ணத்தை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு கல்வியாளர்களுக்கும், காவல்துறைக்கும், அரசுக்கும் இருக்கிறது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது, சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பது என் றெல்லாம் பல்வேறு அம்சங்களில் அரசு கவனம் செலுத்த வேண் டும். திருநெல்வேலியின் பெரு மைக்கு மேலும் சிறுமை சேரா மல் இருக்க அனைத்துத் தரப்பின ரும் ஒத்துழைக்க வேண்டும். இங்கு உள்ள இளைஞர்கள் மூர்க் கத்தன மாக மாறுவதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை அடியோடு அகற்றுவதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT