Published : 16 Jun 2017 08:47 AM
Last Updated : 16 Jun 2017 08:47 AM
நபார்டு வங்கி உதவியுடன் கைத்தறி நெசவாளர்கள் குறைந்த செலவில் மின்னணு சித்திர நெசவுக் கருவி மூலம் நெசவு செய்யும் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.நாகூர் அலி ஜின்னா ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நெசவாளர்கள் கைத்தறியில் துணி நெய்யும்போது அதில் இடம்பெறும் டிசைன்களை உருவாக்க துளையிடப் பட்ட அட்டையைப் பயன்படுத்தி வரு கின்றனர். இதனால் ஒரு வடிவமைப்பை மேற்கொள்ளவே அவர்களுக்கு ஏராள மான அட்டைகள் தேவைப்படுகின்றன. இதனால் அதிக செலவு ஏற்படுகிறது. வேலைப்பளுவும் கூடுகிறது.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண் பதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள விவேகா அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டர் குமாரவேலு என்பவர் மின்னணு சித்திர நெசவு கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார். இதன்மூலம் நெசவாளர்கள் குறைந்த செலவில் புதிய டிசைன்களை உருவாக்கி நெசவு செய்ய முடியும். இத்திட்டத்துக்காக நபார்டு வங்கி மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணைந்து ரூ.64.56 லட்சம் நிதி வழங்கியுள்ளது.
இதன்படி, காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் என்ற கிராமத் தில் மின்னணு சித்திர நெசவு மையம் அமைக்கப்பட் டுள்ளது. இங்கு கைத்தறி நெசவாளர்களுக்கு கணினி யில் புதிய டிசைன் களை உருவாக்கி நெசவு செய் வதற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும் இங்கு அமைக்கப் பட்டுள்ள கம்ப்யூட்டர் டிசைன் ஸ்டுடியோவில் நெசவாளர் களே தங்களுக்குத் தேவை யான டிசைன்களை வடி வமைத்துக் கொள்ளலாம்.
இந்த மின்னணு சித்திர நெசவுக் கருவியை பொருத்து வதன் மூலம் நெசவாளர் களுக்கு வேலைப்பளுவும், புதிய டிசைன்களை உருவாக்கு வதற்கான செலவும் குறை யும். மேலும், எவ்வளவு டிசைன்களை வேண்டுமானா லும் உருவாக்கி கொள்ள லாம்.
தற்போது 2 மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் அடுத்ததாக திரு வண்ணாமலை மாவட்டம், திருப்பனங்காட்டில் செயல் படுத்தப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT